ப்ரீகபலின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..! Pregabalin Tablet Uses in Tamil..!
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. நமது பொதுநலம்.காம் பதிவில் ஒவ்வொரு வகையான மருந்து மற்றும் மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் ப்ரீகபலின் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி படித்திரியலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
ப்ரீகபலின் மாத்திரை பயன்கள்:
இந்த ப்ரீகபலின் மாத்திரை என்பது வலிப்புத்தாக்க எதிர்ப்பு மருந்தாக உள்ளது மற்றும் நரம்பு வலி, நடுக்கம், வலிப்பு மற்றும் ஃபைப்ரோமையால்ஜியா போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
நீரிழிவு நரம்பு வலி, வலிப்பு, தண்டுவட பாதிப்பு, ஓய்வற்ற கால் நோய் மற்றும் பொதுவான பதற்றக் கோளாறு சிகிச்சைக்குப் பயன்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சைக்ளோபம் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
பக்க விளைவுகள்:
ப்ரீகபலின் மாத்திரை தூக்கக் கலக்கம், ஞாபக மறதி, குழப்பம், மோசமான இயக்கவியல் ஒருங்கிணைப்பு, பார்வை கோளாறு, வாய் வறட்சி மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற சில பொதுவான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
தசை பிடிப்பு, எரிச்சலூட்டும் தன்மை, தசைப்பிடிப்புக்கள், களைப்பு, தொண்டை வலி, ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி, மூட்டு வலி, உணர்வின்மை, கூச்ச உணர்வு, வாந்தி, நடுக்கம், அயர்வு, அதிகரித்த பசி, தலைச்சுற்று, குழப்பம், சோர்வு, முதுகு வலி, தலைவலி, எடை அதிகரிப்பு, மலச்சிக்கல், சிறுநீர் அடங்காமை, சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் கோளாறு, நியூட்ரோபீனியா, கணைய அழற்சி, விழுங்க இயலாமை, ராப்டோமைலிசிஸ்.
எச்சரிக்கை:
இந்த மருந்தினை தவறாகப் பயன்படுத்துதல், ஆஞ்சியோடெமா மற்றும் தற்கொலை ஏற்படும் ஆபத்து போன்ற மிக மோசமான பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
இந்த மருந்தை நீண்ட நேரம் பயன்படுத்தினால், பிறகு அந்த மருந்திற்கு நீங்கள் அடிமையாகும் ஆபத்தும் உள்ளது.
நீங்கள் கர்ப்பமாக இருந்தால், அல்லது மருந்தின் உட்பொருட்கள் ஏதேனும் உடன் ஒவ்வாமை எதிர்வினை இருப்பதாக தெரிந்தால், உங்களுக்கு இந்த ப்ரீகபலின் மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை
உங்களுக்கு இதய செயலிழப்பு, சீரற்ற இதயத்துடிப்பு, நீரிழிவு, இரத்தக்கசிவு பிரச்சினைகள், தசைப் பிரச்சனைகள், அதிக அழுத்தத்தால் ஏற்படும் அழுத்தம் அல்லது குறைந்த இரத்த துகளனுக்களின் எண்ணிக்கை ஆகியவை இருந்தால்.
உங்களுக்கு சிறுநீரகம் முறையற்று இயங்கினால் அல்லது டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தால்.
நீங்கள் கர்ப்பமாக இருந்தால், கர்ப்பமாக திட்டமிருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால்.
ஏற்கனவே ஏதாவது ஒரு பிரச்சனைக்கு மருந்து எடுத்துக்கொண்டிருந்தால் உங்கள் மருத்துவரிடம் அதனை தெரிவிக்க வேண்டும்.
மாத்திரை அளவு:
பொதுவாக, ப்ரீகபலின் மருந்து ஆரம்ப அளவு 50 மிகி, ஒரு நாளுக்கு 3 முறை, வாய்வழியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எரித்ரோமைசின் மாத்திரை பயன்கள் மற்றும் அதன் பக்க விளைவுகள்..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |