Primolut n Uses in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறோம். அந்தவகையில் இப்பதிவில், Primolut N மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன என்பதை விவரித்துள்ளோம். எந்தவொரு மருந்தையும் அதன் பக்கவிளைவுகள் பற்றி அறியாமல் பயன்படுத்தக்கூடாது. ஒரு மருந்தை நாம் உட்கொள்ள போகிறோம் என்றால், அம்மருந்தை பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பிறகு தான் உட்கொள்ள வேண்டும். எனேவ, நீங்கள் Primolut N மாத்திரையை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அம்மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பின்வருமாறு படித்து தெரிந்து கொளுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
What Are The Uses of Primolut n Tablet in Tamil:
Primolut N-யின் பயன்கள்:
Primolut N மாத்திரைகள் மாதவிடாய் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது இயற்கையான ஹார்மோன் புரோஜெஸ்ட்டிரோனின் செயல்களைப் பிரதிபலித்து, மாதவிடாய் சுழற்சியை சரிசெய்கிறது. ப்ரிமோலட் என் மாத்திரைகள் நோரெதிஸ்டிரோன் என்ற ஹார்மோனைக் கொண்டுள்ளது. இந்த வகை ஹார்மோன் இயற்கையான பெண் ஹார்மோன் புரோஜெஸ்ட்டிரோனைப் போன்றது. Primolut N மாத்திரைகள் பின்வரும் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
- ஒழுங்கற்ற மாதவிடாய்
- மார்பக புற்றுநோய்
- மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி
- எண்டோமெட்ரியோசிஸ் (கருப்பை நோய்)
- மாதவிடாய் கால இடைவெளி சரியாக இல்லாதவர்களுக்கு இதை மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
- மாதவிடாய் நிறைய ரத்தக்கசிவு ஏற்படுவதை கட்டுப்படுத்த உதவுகிறது.
- மாதவிடாய்க்கு முன் ஏற்படும் வயிற்றுவலி, மூட்டுவலி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
- நீண்ட நாட்கள் தொடர்ந்து மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு Primolut N கொடுக்கப்படுகிறது.
- கருப்பையில் உள்ள உடலிழை (Endometrium) அதிகமாக வளர்வதை கட்டுப்படுத்த இது பயன்படுகிறது.
- பாலூட்டுதல் நிறுத்தும் பெண்களுக்கு பால்சுரப்பை கட்டுப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது.
க்ளோபிலெட் மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
பக்கவிளைவுகள்:
- மார்பகத்தில் வலி ஏற்படுதல்
- குமட்டல்
- வாந்தி
- பிறப்புறுப்பில் அரிப்பு
- மயக்கம்
- எடை அதிகரிப்பு
- தூக்கமின்மை
- கண் மற்றும் தோல் மஞ்சள் நிறத்தில் காணப்படுவது.
- மேலே கூறியுள்ள இதுபோன்ற பக்க விளைவுகள் ஒரு சிலருக்கு ஏற்படலாம். எனவே, மருத்துவரின் பரிந்துரையின் படி இம்மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
முக்கிய குறிப்பு:
- கர்ப்பமாக இருப்பவர்கள்
- தாய்ப்பால் கொடுப்பவர்கள்
- பார்வை குறைபாடு உள்ளவர்கள்
- நீரிழிவு நோய் உள்ளவர்கள்
- அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்கள்
- பருவமடையாத பெண்கள்
- எடை அதிகம் உள்ளவர்கள்
மேலே கூறியுள்ள அனைவரும் Primolut N மாத்திரையை மருத்துவரின் அனுமதி இல்லாமல் தானாக உட்கொள்ளுதல் கூடாது.
Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |