Progesterone Tablet Uses in Tamil
ஹலோ பிரண்ட்ஸ் வணக்கம்.. ஆரோக்கியம் தொடர்பான பல வகையான பிரச்சனைக்கு நாம் அதற்கு ஏற்றது போல் மருந்து மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்வோம். அவ்வாறு எடுத்து கொள்ளும் மருந்து மாத்திரைகள் பயன்களை கொடுத்தாலும் சில பக்க விளைவுகளையும் சேர்த்து கொடுக்கும், ஆக அதனை பற்றி நாம் அறிந்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று நாம் Progesterone மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம்.
அதாவது Progesterone மாத்திரை எதற்கு பயன்படுகிறது, அதனை எடுத்துக்கொள்வதினால் என்னென்ன மாதிரியான பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். மருந்து அளவு என்ன?. யாரெல்லாம் இந்த Progesterone மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்? யாரெல்லாம் எடுத்துக்கொள்ள கூடாது என்பது குறித்த விரிவான தகவலை இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொள்வோமா..
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
புரோஜெஸ்ட்டிரோன் மாத்திரை பயன்கள் – Progesterone Tablet Uses in Tamil:
மாதவிடாய் மற்றும் கருமுட்டை வெளியேற்ற ஒழுங்குமுறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெண் ஹார்மோன் ப்ரோஜெஸ்டெரோன் (Progesterone) என அழைக்கப்படுகிறது. ஆக இது பெண் மலட்டுத்தன்மை (கருவுற இயலாமை) மற்றும் ஹார்மோன் மாற்றீட்டு சிகிச்சை (HRT) சிகிச்சைக்காக இந்த Progesterone மாத்திரை பயன்படுத்தப்படும். இது அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் முன் நோய்க்குறி (PMS) அறிகுறிகளுக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
ஜெரோடோல் பி மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!
புரோஜெஸ்ட்டிரோன் மாத்திரை பக்க விளைவுகள் – Progesterone Tablet Side Effects in Tamil:
தூக்கக் கலக்கம், வயிற்று வலி, மார்பக வலி, தலைவலி, குமட்டல், வாந்தி, வீங்கல், கருப்பை இரத்தப்போக்கு/ இரத்தக்கசிவு, வயிற்று வலி போன்ற பக்க விளைவுகளை சந்திக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எச்சரிக்கை:
நீங்கள் கர்ப்பமாக இருந்தால் கண்டிப்பாக இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது ஏன் என்றால் இந்த மாத்திரை உங்கள் வயிற்றில் வளரும் கருவிற்கு தீங்கு விளைவித்துவிடும்.
கல்லீரல் நோய், பிறப்புறுப்பு இரத்தப்போக்கு அல்லது மார்பக புற்று நோய் உள்ளவர்கள் இந்த Progesterone மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது. ஏன் என்றால் இது இரத்த உறைவு, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
மருதை எடுத்துக்கொள்ளும் முறை:
ப்ரோஜெஸ்டெரோன் மாத்திரை உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். மருந்து உங்களை சோர்வடைய அல்லது மயக்கமடையச் செய்யும் என்பதால், இது இரவில் எடுத்துக்கொள்வது சிறந்தது. இந்த மருந்தை உட்கொள்ளும்போது வழக்கமான உடல் பரிசோதனைகள் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
மான்டிகோப் மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |