Prolomet xl 25 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

Advertisement

Prolomet xl 25 Uses and Side Effects in Tamil

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் Prolomet xl 25 Uses and Side Effects in Tamil பற்றி பார்க்கலாம் வாங்க. பொதுவாக நாம் ஏதோவொரு உடல்நல பிரச்சனைகளுக்காக மருந்துகளை உட்கொண்டு வருவோம். அப்படி உட்கொள்ளும் போது, அந்த மருந்தினை பற்றிய முழு விவரங்களையும் அறிந்திருக்க வேண்டும். அதாவது, நம் உட்கொள்ளும் மருந்தின் பயன்கள் என்ன.? பக்கவிளைவுகள் என்ன.? இந்த மருந்தினை யாரெல்லாம் உட்கொள்ளக்கூடாது உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொண்டு அதன் பிறகு மருந்தினை உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் இக்காலத்தில் நோய்கள் எதனால் வருகிறது என்றே தெரிவதில்லை.

அந்த அளவிற்கு நோய்களின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதற்கு நாம் உட்கொள்ளும் மருந்துகளும் ஒரு காரணமாக இருக்கலாம். அதாவது, அளவுக்கு அதிகமாக மருந்து உட்கொள்வதினால் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. எனவே, நீங்கள் Prolomet xl 25 மாத்திரையை பயன்படுத்தி வந்தால் அதனின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

குறிப்பு: எந்த ஒரு மாத்திரை மற்றும் மருந்தையும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது. 

Prolomet xl 25 Uses in Tamil:

Prolomet xl 25 Uses in Tamil

புரோலோமெட் எக்ஸ்எல் 25 மிகி மாத்திரை ஆனது, இதய செயல்பாட்டை மேம்படுத்தவும், இரத்தக்குழாய்கள் மூலம் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. Prolomet XL 25 Tablet ஆனது பீட்டா-தடுப்பான்கள் எனப்படும் மருந்துகளின் குழுவிற்கு சொந்தமானது ஆகும். இவற்றின் பயன்படுகள் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.

  • உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்) சிகிச்சை
  • ஆஞ்சினா சிகிச்சை (இதயம் தொடர்பான மார்பு வலி)
  • அரித்மியா சிகிச்சை
  • மாரடைப்பு தடுப்பு
  • ஒற்றைத் தலைவலி

மேலே, கூறப்பட்டுள்ள பிரச்சனைகளை தடுக்கவும், குறைக்கவும் Prolomet XL 25 Tablet பரிந்துரைக்கப்படுகிறது.

Cystone மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்.!

Prolomet xl 25 Side Effects in Tamil:

Prolomet xl 25 மாத்திரையை உட்கொள்ளும் நபர்களில் ஒரு சிலருக்கு பின்பவரும் பக்கவிளைவுகள் ஏற்படலாம். இதுபோன்ற பக்கவிளைவுகளை நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

  • சோர்வு
  • தலைவலி
  • மெதுவான இதய துடிப்பு
  • மயக்கம்
  • குமட்டல்
  • மூச்சுத்திணறல்
  • சொறி
  • வயிற்றுப்போக்கு
  • மனச்சோர்வு

மருந்தின் அளவு:

புரோலோமெட் எக்ஸ்எல் 25 மிகி மாத்திரையை உணவுக்கு முன்பும், பின்பும் மருந்தின் அளவு ஆனது, நோயின் நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது. மருத்துவர்கள் நோயாளிகளின் நிலையை பொறுத்து மருந்தை அதிக அளவிலும் குறைந்த அளவிலும் கொடுப்பார்கள்.

முன்னெச்சரிக்கைகள்:

  • இம்மருந்தை உட்கொள்பவர்கள் மது அருந்த கூடாது.
  • கர்ப்பமாக மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவரின் அனுமதி இல்லாமல் இம்மருந்தை உட்கொள்ளுதல் கூடாது.
  • Prolomet xl 25 மாத்திரையை உட்கொண்ட பிறகு வாகனம் ஓட்டுதல் கூடாது.

Sildenafil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement