Propranolol மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

Advertisement

Propranolol Tablet Uses in Tamil

இன்றைய கால கட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் உணவு காரணமாக பல நோய்கள் வருகின்றது. இதனை சரி செய்வதற்காக மருந்து, அதிகமாக எடுத்து கொள்கின்றோம். ஆனால் நாம் சாப்பிடும் மாத்திரைகளில் நன்மையை விட பக்க விளைவுகள் அதிகமாக உள்ளது. அதனால் ஒவ்வொரு மாத்திரையிலும் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொண்ட பிறகு சாப்பிட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் propranololமாத்திரை நன்மை மற்றும் தீமைகளை அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Propranolol Tablet Uses:

propranolol tablet side effects in tamil

Propranolol மாத்திரையானது வேகமான இதயத் துடிப்பு, மைக்ரேன், உயர் இரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.

Propranolol Tablet Side Effects:

  • மலச்சிக்கல்
  • குமட்டல் அல்லது வாந்தி
  • தலைச்சுற்றல்
  • தலைவலி
  • தூக்கக் கலக்கம்
  • கிளர்ச்சி
  • செரிமான பிரச்சனை
  • வலிப்புகள்
  • ஒழுங்கற்ற இதய துடிப்பு
  • மூச்சு திணறல்
  • அலர்ஜி
  • நரம்புத் தளர்ச்சி

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Tranexamic acid மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

முன்னெச்சரிக்கை:

இந்த மாத்திரை சாப்பிடுவதால் மயக்கம் மற்றும் உடல் சோர்வு ஏற்படலாம் அதனால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களாக இருந்தாலும் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டாலும் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

கேவிஸ்கான் சிரப் எதற்காக பயன்படுத்தப்படுகிறது தெரியுமா..?

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement