வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Pulmoclear மாத்திரை பற்றிய தகவல்..!

Updated On: March 24, 2025 7:14 PM
Follow Us:
Pulmoclear Tablet Uses in Tamil
---Advertisement---
Advertisement

Pulmoclear Tablet Uses in Tamil

இன்றைய சூழலில் நாம் வாழும் இந்த உலகம் தினமும் அதிக அளவு வளர்ச்சிகளை கண்டுகொண்டே இருக்கின்றது. அதேபோல் அப்படி வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்கின்ற பல வகையான முயற்சிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி கொண்டே தான் உள்ளது. அதனால் இந்த உலகில் தினமும் ஒரு புதிய வகையான நோய்களும் ஏற்பட்டு கொண்டிருக்கின்றது. அப்படி ஏற்படும் நோயினை கட்டுப்படுத்த உதவும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டிருக்கின்றது. எனவே நமது உடல் நலத்தை பாதுகாக்க உதவும் மருந்துகளை பற்றிய சரியான புரிதல் நம்மிடம் அவ்வளவாக இல்லை என்பதே உண்மை. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு மருந்து பற்றிய முழுமையான தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Pulmoclear மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க.. 

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Montek Fx மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க

Pulmoclear Tablet Uses in Tamil:

Pulmoclear Tablet Side Effects in Tamil

பொதுவாக இந்த Pulmoclear மாத்திரையானது ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய், மார்பில் இறுக்கம், நுரையீரல் அழற்சி மற்றும் பிற நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.

அதாவது இந்த மருந்தானது ஒருவருக்கு சுவாசிப்பதில் மிகவும் சிரமத்தை உணரும்போது இது நல்ல பலனை அளிக்கின்றது. இந்த மாத்திரையானது மூச்சுக்குழாய் அடைப்பைக் குறைப்பதன் மூலம் செயல்படுகிறது.

மேலும் இது ஒரு அழற்சி எதிர்ப்பு கலவையாகவும் செயல்படுகிறது. இதனை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள். மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள்.

அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Pulmoclear Tablet Side Effects in Tamil:

Pulmoclear மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  • வாந்தி
  • குமட்டல்
  • வயிற்று வலி
  • சோர்வு
  • இரைப்பை கோளாறுகள்
  • நெஞ்செரிச்சல்
  • மூச்சுத் திணறல்
  • பசியின்மை
  • உணவுக்குழாய் அடைப்பு
  • தோல் அரிப்பு
  • மலச்சிக்கல்
  • வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
  • மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகளை உட்கொள்ளவும். பொதுவாக, நாளுக்கு 1-2 முறை உணவுக்குப் பிறகு உட்கொள்ளலாம். அதிக நீர் அருந்தவும், இது சளி நீக்கத்திற்கு உதவும்.
  • கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு மட்டுமே பயன்படுத்தவும். அதிகம் உட்கொண்டால் வாந்தி, தலைச்சுற்றல், மலச்சிக்கல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். சிறுநீரக மற்றும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு மட்டுமே பயன்படுத்தவும். மருந்தை தவறான அளவில் உட்கொண்டால் தூக்கமின்மை அல்லது மயக்கம் ஏற்படும்.

Montelukast மாத்திரை பற்றிய தகவல்

முன்னெச்சரிக்கை:

இந்த Pulmoclear மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

வலிப்பு குறைபாடுகள், கல்லீரல் அல்லது சிறுநீரக கோளாறு அல்லது இரத்தக் குழாய் கோளாறுகள் ஆகியவையால் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்னால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Montek bl மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now