Rablet D Tablet Uses in Tamil
இக்காலத்தில் உள்ள அனைவருக்கும் ஏதாவது ஒரு காரணத்தினால் உடல்நிலை சரியில்லாமல் போகிறது. உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததும், உடனே பக்கத்தில் உள்ள மருந்தகத்திற்கோ அல்லது மருத்துவரிடமோ சென்று மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம். அப்படி நாம் உட்கொள்ளும் மாத்திரைகள் எதற்காக பயன்படுகிறது.? இந்த மாத்திரைகளை உட்கொண்டால் நமக்கு ஏதேனும் சைடு எஃபக்ட்ஸ் ஏற்படுமா..? போன்ற விவரங்களை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். அந்த வகையில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் நம் பொதுநலம்.காம் பதிவில் தினமும் மருந்துகளை பற்றிய விவரங்களை தெரிவித்து வருகிறோம். அதேபோல். இன்றைய பதிவில் நாம் Rablet D மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..
Rablet D மாத்திரையின் பயன்கள்:
Rablet D மாத்திரைகள் வயிற்றின் அதிகப்படியான அளவை குறைக்க உதவுகிறது.
குடலின் மேல் பகுதியில் அல்சர் (டியோடெனல் அல்சர்), இரைப்பை-உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) மற்றும் சோலிங்கர்-எலிசன் சிண்ட்ரோம் போன்றவை ஏற்படுவதைத் தடுக்கிறது.
ராப்லெட் டி கேப்ஸ்யூல் என்பது ரேப்பிரஸோல் மற்றும் டோம்பெரிடோன் ஆகிய இரண்டு மருந்துகளின் கலவை ஆகும்.
இம்மருந்து வயிற்றில் உள்ள அமிலத்தை மற்றும் வாந்தி அல்லது குமட்டல் போன்றவற்றையை குறைக்கிறது. மேலும், இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
இம்மாத்திரை, 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மற்றும் 35 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் குமட்டல் அறிகுறிகளை குணப்படுத்துகிறது.
மேலும் இந்த மாத்திரையினை நீங்கள் மருத்துவர் கூறிய அளவினை விட கூடவோ அல்லது குறைவாகோ எடுத்துக் கொள்ள கூடாது.
Flexiflam மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!
பயன்படுத்தும் முறை:
Rablet D மாத்திரைகளை முழுதாக தண்ணீருடன் விழுங்க வேண்டும். அதனை நசுக்கியோ அல்லது வாயில் போட்டு மென்றோ உட்கொள்ள வேண்டாம்.
அதுமட்டுமில்லாமல், இம்மாத்திரையை காலையில் அல்லது உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பாக எடுத்து கொள்வது நல்லது.
முன்னெச்சரிக்கை:
- கர்ப்பமாக இருப்பவர்களும், பாலூட்டும் தாய்மார்களும் இம்மருந்தை உட்கொள்ள கூடாது.
- மது அருந்திவிட்டு இம்மருந்தை உட்கொள்ள கூடாது.
- மேலும் இம்மருந்து உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
- காஃபி
- டீ
- காரமான, பொறித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்
- சிட்ரஸ் பழங்கள்
- தக்காளி
இதுபோன்ற அமில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
Laricef o 200 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Rablet D மாத்திரையின் பக்கவிளைவுகள்:
- தலைவலி
- குமட்டல்
- மயக்கம்
- வைட்டமின் பி-12 குறைப்பு
- பலவீனம்
- தூக்கமின்மை
- வயிற்று வலி
- தோல்களில் வெடிப்பு
- முதுகு வலி
மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் இல்லாமல் வேறு ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்கு தோன்றினாலும் அதனை மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |