Raciper 40 Tablet Uses
நமது உடலில் எந்த பிரச்சனை வந்தாலும் அதனை குணப்படுத்துவதற்காக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை பார்த்து சரியான மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்வோம். இவ்வாறு நாம் நோய்களுக்கு ஏற்றவாறு மருந்தினை எடுத்துக்கொண்ட பிறகு அவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வழக்கமான வாழ்க்கை நிலைக்கு வந்து விடுவோம். ஆனால் இத்தகைய மருந்துகள் ஆனது நமது உடலுக்கு எப்படி நன்மைகளை அளிக்கிறதோ அதே அளவிற்கு சில பக்க விளைவுகள் மற்றும் தீமைகளையும் அளித்து வருகிறது. ஆகவே இந்த மருந்து மாத்திரையாக இருந்தாலும் அதில் இருக்கும் நன்மை மற்றும் தீமைகளை தெரிந்துக்கொள்வது அத்தியாவசியமான ஒன்று. எனவே இன்று Raciper 40 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பது பற்றி பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
ரேசிபர் 40 மி.கி மாத்திரை பயன்கள்:
நமது உடலில் காணப்படும் ஒரு சில பிரச்சனைகளுக்கு மட்டும் தான் இந்த ரேசிபர் 40 மி.கி மாத்திரை ஆனது பரிந்துரை செய்யப்படுகிறது. அந்த வகையில் நெஞ்சு எரிச்சல், அதிகப்படியான அமிலத்தன்மை, வயிற்று புண் மற்றும் சோலிங்கர்-எலிசன் நோய்க்குறி என இத்தகைய நோய்களுக்கு பயன்களை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.
ரேசிபர் 40 மி.கி பக்க விளைவுகள்:
- பசியின்மை
- தலைவலி
- வயிற்று வலி
- குமட்டல்
- மலச்சிக்கல்
- வாயு பிரச்சனை
- இரத்த சோகை
- மூச்சுவிடுதல் சிரமம்
- ஒழுங்கற்ற இதய துடிப்பு
- காய்ச்சல்
- மயக்கம்
மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதாவது பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் மறைக்காமல் உடனே கூற வேண்டும்.
Calpol 650 மாத்திரை பயன்படுத்துவீர்களா… அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.. |
மருந்து எடுத்துக்கொள்ளும் முறை:
இந்த ரேசிபர் 40 மி.கி மாத்திரையினை டீ, காபி மற்றும் பால் ஆகியவற்றையுடன் எடுத்துக்கொள்ள கூடாது. தண்ணீருடன் மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும். அதேபோல் மாத்திரையினை மருத்துவர் கூறிய அளவினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்துகொள்ளக் கூடாது.
முன்னெச்சரிக்கை:
- கர்ப்பிணி பெண்கள்
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
- குழந்தைகள்
- சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்
- கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
- மது அருந்துபவர்
மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆகவே இத்தகைய நபர்களுக்கு மருத்துவர் இந்த மாத்திரையினை பரிந்துரை செய்தால் தற்போது உங்களின் உடல் நிலை பற்றியும், உணவு முறை மற்றும் மருத்துக் குறிப்பு என அனைத்தினையும் தெளிவாக மருத்துவரிடம் கூற வேண்டும்.
Nicip 100 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |