ரனிடிடைன் ஹைட்ரோகுளோரைடு மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Ranitidine Hydrochloride Tablet Uses in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. நாம் உடல் சார்ந்த பலவகையான ஆரோக்கிய பிரச்சனைக்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றோம். அவ்வாறு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். நீங்களாக மருத்துவர்களின் பரிந்துரைப்பு இல்லாமல் இருந்தால் நீங்கள் தான் பல வகையான பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். சரி இன்று தான் ரேனிடிடின் ஹைட்ரோகுளோரைடு மாத்திரை எதற்கு பயன்படுத்துகிறது. அதனுடைய பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
ரேனிடிடின் ஹைட்ரோகுளோரைடு மாத்திரை பயன்படுத்துகிறது – Ranitidine Hydrochloride Tablet Uses in Tamil:
இரைப்பை மற்றும் குடல் புண்களை குணப்படுத்த Ranitidine பயன்படுத்தப்படுகிறது. வயிற்றெரிச்சல், அல்சர், வயிற்று வலி, நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை உள்ளவர்களுக்கு Ranitidine மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. வயிற்றுக்குள் சுரக்கும் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்துவதுடன், Zollinger-Ellison syndrome நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Demisone மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா..?
பக்கவிளைவுகள் – Ranitidine Hydrochloride Side Effects in Tamil:
தலைவலி, தலைச்சுற்றல், நெஞ்சுவலி, மூச்சுவிடுவதில் சிரமம், வாந்தி, குமட்டல்
மனக்குழப்பம், இதயப் படபடப்பு, மஞ்சள்காமாலை, அடர் சிறுநீர், காய்ச்சல், சளியுடன் கூடிய இருமல், தோல் அல்லது முடி சார்ந்த பிரச்சனைகள் இது போறான் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளும் முறை:
இந்த மாத்திரையை வாய் வழியாக உணவுக்கு முன் அல்லது உணவுக்கு பின் மருத்துவர்கள் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.
ஒருவாறு ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும், மருத்துவர்கள் கூறிய அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் எந்த மாத்திரையாக இருந்தாலும் சரி மருத்துவரிகள் பரிந்திருக்கப்ட்ட நாட்களுக்கு மட்டும் எடுத்துகொல்வது மிகவும் சிறந்து.
யாரெல்லாம் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது?
கல்லீரல், சிறுநீரக நோயாளிகள் Ranitidine மாத்திரை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரிடம் தெரியப்படுத்தவும். கர்ப்பிணிகள், தாய்பாலூட்டும் பெண்கள், தாயாக முயற்சிப்பவர்கள் இவர்களெல்லாம் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளக்கூடாது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாண்டோப்ரசோல் 40 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |