ராணிடிடைன் மாத்திரை பயன்கள் | Ranitidine Tablet Uses in Tamil

Ranitidine Tablet Uses in Tamil

ரனிதிதீன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Ranitidine Tablet Uses in Tamil

Ranitidine Tablet Uses in Tamil: நாம் பயன்படுத்துகிற ஒவ்வொரு மாத்திரை அல்லது மருந்துகள் ஒவ்வொரு நோயையும் குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முன்னரும் அதை பற்றிய பொதுவான விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் இரைப்பை மற்றும் குடல் புண்களை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ரனிதிதீன் மாத்திரை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

ரனிடிடைன் மாத்திரை பயன்கள் | Ranitidine Tablet Use in Tamil

ranitidine tablet uses in tamil

 • டியோடினல் அல்சர் அதாவது சிறுகுடல் புண்களை சரி செய்யவும், மேலும் மீண்டும் டியோடினல் அல்சர் ஏற்படாமல் இருக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
 • இரைப்பை புண், வயிற்று புண்களை சரி செய்யவும் உதவுகிறது.
 • உணவுக்குழாயில் ஏற்படும் அழற்சியை தடுக்கவும், வயிற்றில் ஏற்படும் வயிற்று எரிச்சலை சரி செய்யவும் உதவுகிறது.
 • உணவுக்குழாய் வீக்கம், முன் சிறுகுடல் புண், அசிடிட்டி போன்றவற்றை சரி செய்யவும் உதவுகிறது.
 • இரைப்பையில் சுரக்கப்படும் அமில அளவு அதிகமாகும் போது (Hypersecretory Condition) அமிலத்தின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
 • வயிற்றுக்குள் சுரக்கப்படும் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது.
 • சோழிங்கர்-எலிசன் நோய்க்குறி போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
மல்டி வைட்டமின் மாத்திரை பயன்கள்

ரனிடிடைன் மாத்திரை பக்க விளைவுகள் – Ranitidine Tablet Side Effects in Tamil:

 • இந்த மாத்திரை பயன்படுத்துவதன் மூலம் தலைவலி, நெஞ்சுவலி, தசை வலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கும்.
 • தோல் வெடிப்பு, தலை சுற்றல், வாந்தி, குமட்டல், மயக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • மன குழப்பம், வயிற்று வலி, வயிற்று போக்கு, ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • கடுமையான கணைய அழற்சி, லுகோபீனியா, மூட்டு வலி, மார்பகப் பெருக்கம், கல்லிரலில் சுரக்கப்படும் நொதிகளில் மாறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • முகம், உதடுகள், நாக்கில் வீக்கம், தூக்கமின்மை, மயக்க உணர்வு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.
 • மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பக்கவிளைவுகள் இருந்தால் கூட உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ரனிடிடைன் மாத்திரை யார் எடுத்துக்கொள்ளலாம்? யார் எடுத்துக்கொள்ள கூடாது?

 • கல்லீரல், சிறுநீரக நோய் மற்றும் போஃபைரியா போன்ற உடல் நல பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரிடம் இதை சாப்பிடலாமா என்று கேட்டு பின்னர் பயன்படுத்தவும்.
 • கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற முயற்சிப்பவர்கள், குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் கூறினால் மட்டும் பயன்படுத்த வேண்டும்.
 • ரனிடிடைன் மாத்திரையை மருத்துவர் எப்போது சாப்பிட வேண்டும், எந்த அளவு Dosage எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறாரே அந்த அளவு எடுத்து கொள்ள வேண்டும்.
 • இந்த மாத்திரையை வாயில் வைத்து மெல்லவோ, கடிக்க கூடாது. உடனடியாக விழுங்க வேண்டும்.
 • மது அருந்திவிட்டு இந்த மாத்திரையை சாப்பிட கூடாது.

மாத்திரை அளவு:

 • 150MG, 300MG அளவில் கிடைக்கிறது.
மேப்ரேட் மாத்திரை பயன்பாடுகள்
லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Natural health tips in tamil