வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ரானிடின் 150 மிகி மாத்திரை அதிக அளவு பயன்படுத்துபவரா நீங்க.. அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

Updated On: September 27, 2023 5:24 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Ranitin 150 Tablet Uses in Tamil

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் அவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை சரியாக வைத்து கொள்வதற்கு மருந்து என்று ஒன்றை தனியாக எடுத்து கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்கள் உட்கொண்ட உணவுகளே மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மருந்து இல்லாமல் ஒரு சிலர் உயிர்வாழ முடியாது என்ற சூழல் உருவாகி உள்ளது. அதனால் நமது உயிரினை காக்கின்ற மருந்துகளை பற்றிய சரியான புரிதல் நம்மிடம் இருக்க வேண்டும். ஆனால் அது நிமிடம் உள்ளதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமுமொரு மருந்து பற்றிய முழுமையான தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் ரானிடின் 150 மிகி மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

பான்டோப்-டி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதனை தெரிஞ்சிக்கோங்க

Ranitin 150 Tablet Uses in Tamil:

Ranitin 150 Tablet Side Effects in Tamil

இந்த ரானிடின் 150 மிகி மாத்திரையானது ஹிஸ்டமைன்-2 தடுப்பான் என்று அறியப்பட்ட ஒரு மருந்து குழுவை சேர்ந்தது. அதாவது இந்த மருந்து இரைப்பையில் அமில உற்பத்தியின் அளவை குறைத்து, இரைப்பை மற்றும் குடல் புண்களை திறம்பட குணப்படுத்தக்கூடியது.

மேலும் இந்த ரானிடின் 150 மிகி மருந்தானது இரைப்பையில் அதிகப்படியான அமில உற்பத்திக்கு வழிவகுக்கும், இரையக நோய் (GERD) மற்றும் சோழிங்கர்-எலிசன் நோய்க்குறி போன்ற நிலைமைகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

இந்த மருந்தில் பலவகையான மி.லி உள்ளதால் இதனை மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Zinemac 150 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Ranitin 150 Tablet Side Effects in Tamil:

ரானிடின் 150 மிகி மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  • தலைவலி
  • மலச்சிக்கல்
  • வயிற்றுப்போக்கு
  • வயிற்று வலி
  • நெஞ்சு வலி 
  • மயக்கம்
  • மங்கலான பார்வை 
  • மூட்டுவலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

முன்னெச்சரிக்கை:

இந்த ரானிடின் 150 மிகி மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

நீங்கள் கர்ப்பமாகவோ மற்றும் தாய்பால் அளிக்கின்ற தாய் என்றாலும் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்.

அதேபோல் நீங்கள் கல்லீரல், சிறுநீரக நோய் மற்றும் போஃபைரியா போன்ற உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

சிப்கால் 500 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now