Rantac 150 Tablet Uses in Tamil
மனிதனாக பிறந்த அனைவருமே உடல் நல பிரச்சனை ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். அந்த மாத்திரையை மருத்துவர் பரிந்துரைக்காமல் நீங்களாக மெடிக்களில் சென்று என்ன செய்கிறதோ அதை மட்டும் சொல்லி மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது.,ஒவ்வொரு மாத்திரையிலும் நன்மை மற்றும் தீமை அடங்கியிருக்கிறது. அதனால் அந்த மாத்திரைகளை எதற்காக சாப்பிடுகிறோம், அதை சாப்பிடுவதால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்றெல்லாம் அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கும் உதவும் வகையில் தினந்தோறும் ஒவ்வொரு மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி பதிவிட்டு வருகிறோம். இன்றைய பதிவில் Rantac 150 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..
Rantac 150 Tablet Uses in Tamil:
இந்த மாத்திரை இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD), ஆசிட் ரிஃப்ளக்ஸ், குடல் புண்கள், நெஞ்செரிச்சல், அஜீரண கோளாரு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
Rantac 150 Tablet Side Effects in Tamil:
- தலைவலி
- வயிற்றுப்போக்கு
- மலசிக்கல்
- வயிற்றுவலி
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
Nocold Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!
முன்னெச்சரிக்கை:
Rantac மாத்திரையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டும் தான் சாப்பிட வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இந்த மாத்திரையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த மாத்திரை சாப்பிடும் போது சில சமயம் தூக்கம் அல்லது மயக்கத்தை ஏற்படுத்தலாம், அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
Rantac மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவை அதிகரிக்கும்.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருந்தளவு:
மருத்துவர் பரிந்துரைத்த அளவை விட கூடவோ, அல்லது குறைவாகவே எடுத்து கொள்ள கூடாது. ஒருவேளை நீங்கள் மாத்திரை சாப்பிடுவதை மறந்து விட்டால் அதனை சரி செய்வதற்கு இரு மாத்திரையாக எடுத்து கொள்ள கூடாது.
ஆக்டன் OR மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |