Rantac Syrup Uses in Tamil
பொதுவாக நமது உடலில் என்ன மாதிரியான பிரச்சனைகள் இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு தான் மருந்து மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அந்த வகையில் பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் பரிந்துரை செய்யும் மாத்திரை மற்றும் சிரப்புடன் ஆன்டி பயாட்டிக், சத்து மாத்திரை என என்பது கண்டிப்பாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு விதமான பயன்பாட்டினை கொண்டுள்ளது. அதேபோல் இத்தகைய மருந்துகள் நமக்கு பயன் அளித்தாலும் கூட அதில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பது பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். எனவே இன்று Rantac சிரப்பில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Rantac சிரப்பில் உள்ள பயன்கள்:
Rantac சிரப் ஆனது பெரும்பாலும் ஆசிட் ரிஃப்ளக்ஸ், நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண் மற்றும் இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் என இவற்றை எல்லாம் குணப்படுத்து உதவுகிறது. ஆகையால் இத்தகைய சிரப் ஆனது மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.
மேலும் இந்த சிரப்பினை நீங்கள் குடிக்கும் போதும் தண்ணீருடன் கலந்து மட்டுமே குடிக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் மற்றவையுடன் கலந்து குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
மருந்தின் அளவு:
பொதுவாக எந்த மருந்தாக இருந்தாலும் கூட அதனை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்யலாம் மருந்தினை கூடவோ அல்லது குறைவாகவோ எடுத்துக்கொள்ள கூடாது.
Tranexamic acid மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..
Rantac Syrup Side Effects in Tamil:
- வயிற்று போக்கு
- தலைவலி
- வயிற்றில் புண்
- மலச்சிக்கல்
மேலே சொல்லப்பட்ள்ள பக்க விளைவுகள் Rantac சிரப்பிற்கான பக்க விளைவுகளாக காணப்பட்டாலும் கூட இவற்றை இல்லம் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிப்பது நல்லது.
யாருக்கு முன்னெச்சரிக்கை:
கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், குழந்தைகள், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் சிறுநீரகம் பிரச்சனை உள்ளவர்கள் என இவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மேலும் இந்த சிரப்பினை ஏதேனும் ஒரு முறை குடித்து அதன் மூலம் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டு இருந்தாலும் கூட அதனையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
கேவிஸ்கான் சிரப் எதற்காக பயன்படுத்தப்படுகிறது தெரியுமா
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |