ரெஜெஸ்ட்ரோன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Advertisement

ரெஜெஸ்ட்ரோன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..! Regestrone Tablet Uses in Tamil..!

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் ரெஜெஸ்ட்ரோன் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி தான் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக இந்த ரெஜெஸ்ட்ரோன் மாத்திரை பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை குணப்படுத்த பயன்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோய்க்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறதாம். சரி வாங்க இந்த மாத்திரை எந்த பிரச்சனைக்கெல்லாம் பயனளிக்கிறது, இந்த மாத்திரையை எடுத்துக்கொண்ட பிறகு எப்படி செயல்படுகிறது. இந்த மாத்திரை எடுத்துக்கொள்வதினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன போன்றவற்றையெல்லாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாகவே பயன்படுத்த கூடாது.

ரெஜெஸ்ட்ரோன் மாத்திரை:Regestrone Tablet

இந்த ரெஜெஸ்ட்ரோன் மாத்திரை வலி அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சார்ந்த அனைத்து கோளாறுகளுக்கும் இந்த மாத்திரை சிகிச்சையளிக்கப்படுகிறது. குறிப்பாக ரெஜெஸ்ட்ரோன் மாத்திரை என்பது ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக பெண்களுக்கு ஏற்படும் அசாதாரண பிறப்புறுப்பு இரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை புரோஜெஸ்டின் வடிவமாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Xirtam H Tablet 10 மாத்திரையின் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்வோம்..!

பயன்கள்:

அதிக இரத்த போக்கு:

அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு 7 நாட்களுக்கு மேல் நீடித்த மாதவிடாய் அதிக இரத்த போக்கு ஆகும். இது இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவது உடல் பலவீனத்திற்கு வழிவகுக்கும் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆக இந்த ரெஜெஸ்ட்ரோன் 5 mg மாத்திரை உங்கள் மாதவிடாய் காலத்தில் நீடித்த மற்றும் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது

கருத்தடை:

கருத்தடை என்பது தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்கும் ஒரு முறையாகும். ரெஜெஸ்ட்ரோன் 5mg மாத்திரையானது கருமுட்டை வெளிப்படுவதை நிறுத்துவதன் மூலமும், கருப்பையிலிருந்து முட்டை வெளியாவதன் மூலமும் கர்ப்பத்தைத் தடுக்கிறது.

பக்கவிளைவுகள்:

  • கால்களில் அதிகப்படியான வலி
  • முகப்பரு
  • அதிக இரத்த போக்கு
  • வயிற்று வலி
  • தலைவலி
  • தலைசுற்றல்
  • வாந்தி
  • பித்தம்
  • மார்பக வலி
  • முடி உதிர்வு
  • கருப்பை நீர்க்கட்டி
  • பார்வை குறைபாடு

மேல் கூறப்பட்டுள்ள பக்கவிளைவுகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்தது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Ascoril LS Syrup பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா..?

யாரெல்லாம் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது?

கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பார்வை குறைபாடு உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், குழந்தைகள் ஆகியவர்கள் இந்த மருந்தை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள கூடாது.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement