Revital மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Advertisement

Revital Tablet Uses in Tamil

மனிதர்களாக பிறந்த அனைவருமே உடல் நல பிரச்சனை ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். அந்த மாத்திரையை சாப்பிட்ட பிறகு உடல் நல பிரச்சனை சரியாகிவிட்டால் நல்ல மாத்திரையென்று நினைக்கிறோம். ஆனால் நாம் பயன்படுத்தும் எல்லா மாத்திரைகளிலும் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டுமே இருக்கிறது. அதனால் நீங்கள் மாத்திரையை சாப்பிடுவதற்கு முன் அந்த மாத்திரைகள் எதற்காக சாப்பிடுகிறோம், அதன் தீமைகள் என்னென்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Revital மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Revital Meaning in Tamil:

Revital என்பதற்கு மீண்டும் புத்துணர்ச்சி பெறுதல், மீண்டும் புத்துணர்ச்சி அளித்தல் என்பது அர்த்தமாக இருக்கிறது.

Revital Tablet Uses in Tamil:

Revital Tablet side effects in Tamil

  • Revital மாத்திரை ஆற்றலை வழங்குகிறது.
  • மன அழுத்தத்தை குறைத்து மனதை ரிலாக்ஸாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
  • உடலை சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்து கொள்வதற்கு பயன்படுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • மனதை விழிப்புணர்வுடன் வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
Vizylac மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்:

  • குமட்டல்
  • பசியின்மை
  • வயிற்று பிடிப்பு
  • மலச்சிக்கல்

மேல் கூறியுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை மேல் கூறியுள்ள பக்க விளைவு இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமானது.

என்னென்ன சத்துக்கள் உள்ளது:

ஜின்ஸெங் சாறு, வைட்டமின் ஏ  வைட்டமின் பி, வைட்டமின் சி,வைட்டமின் இ,  வைட்டமின் டி,  நிகோடினமைடு, கார்போஹைட்ரேட்டுகள், ஃபோலிக் அமிலம், இரும்பு ஃபுமரேட் , தாமிரம் 0.5, பொட்டாசியம் சல்பேட்,  மாங்கனீசு, மெக்னீசியம் சல்பேட், துத்தநாக ஆக்சைடு, கால்சியம், பாஸ்பேட் , அயோடின், புரதம், கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

மருந்தளவு:

மருத்துவர் கூறிய அளவில் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை சரி செய்வதற்கு இரு மாத்திரைகளாக எடுத்து கொள்ள கூடாது.

முன்னெச்சரிக்கை:

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement