Risperidone மாத்திரை பற்றிய தகவல்..!

Advertisement

Risperidone Tablet Uses in Tamil

இன்றைய காலகட்டத்தில் மருந்துகளால் மட்டுமே நம்மில் பலரின் வாழ்க்கை சீராக இயங்கி கொண்டிருக்கிறது எனலாம். அதற்கு காரணம் இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மற்றும் நாம் அனைவரின் உணவு பழக்கமும் தான். அப்படி நாம் பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லையென்றே இருக்கும். அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்து பற்றிய தகவல்களை அறிந்துகொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Risperidone மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

Okamet 500 மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க

Risperidone Tablet Uses in Tamil:

Risperidone Tablet Side Effects in Tamil

இந்த Risperidone மாத்திரையானது ஒரு இயல்பற்ற மனச்சிதைவு எதிர்ப்பு மருந்து, மனநோய் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இந்த மருந்தானது மனச்சிதைவு மற்றும் மன இறுக்கம், இருதுருவக் குறைபாட்டுக்கான அறிகுறிகள் ஆகிய இரண்டையும் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

Risperidone மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் (இரசாயன தூதுவர்கள்) சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது. இதன் மூலம் நமது மனஅழுத்தம் குறைகிறது.

இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள். மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Risperidone Tablet Side Effects in Tamil:

Risperidone மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  • தலைவலி
  • நீர்த்தல்
  • அயர்வு
  • குமட்டல்
  • லேசான-தலைசுற்றல்
  • அமைதியின்மை
  • உடல் எடை அதிகரித்தல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

லோபெராமைட் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

முன்னெச்சரிக்கை:

இந்த Risperidone மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இந்த மருந்தினை பயன்படுத்தும் பொழுது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

மருந்தினை ஒரு வேளைக்குத் தவறவிடப்பட்டால், அடுத்த வேளை மருந்துடன் சேர்த்து அதிகமாக உட்கொள்ளாதீர்கள்.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Norfloxacin மாத்திரை பற்றிய தகவல்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement