Rosuvastatin மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்.! | Rosuvastatin Tablet Uses in Tamil

Advertisement

Rosuvastatin Tablet Uses in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் மருந்து பகுதியில் Rosuvastatin மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு பொருளின் பயன்கள் என்ன.? பக்கவிளைவுகள் என்ன என்பதை அறிந்து அதன் பிறகு, உட்கொள்ள வேண்டும். ஏனென்றால், இக்காலத்தில் நோய் எப்போது வருகிறது.? எதன் மூலம் வருகிறது.? என்பதே தெரிவதில்லை.

ஆகையால், நீங்கள் எந்தவொரு மருந்தினை எடுத்துக்கொள்வதற்கு முன்பாக, அதிலுள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் Rosuvastatin மாத்திரையை பயன்படுத்துபவர்களாக இருந்தால், அம்மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

பயன்கள்:

ரோசுவாஸ்டாடின் 10 மிகி மாத்திரை (Rosuvastatin 10 MG Tablet) உடலில் கொழுப்பின் அளவு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க பயன்படுகிறது.மேலும், இது இதய நோய்களை தடுக்கவும் பயன்படுகிறது. இம்மாத்திரையின் மேலும்ம் முக்கியமான பயன்பாடுகள் பின்வருமாறு:

  • அதிக கொழுப்புச்ச்த்து
  • மாரடைப்பு
  • நீரிழிவு
  • உயர் கொழுப்பு அளவுகளை
  • எதிர்ப்பு நீரிழிவு
  • கொழுப்பு

Levofloxacin மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

பக்கவிளைவுகள்:

ரோசுவாஸ்டாடின் மாத்திரை ஆனது ஒரு சிலர்க்கு பின்வரும் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

  • இரைப்பை குடல் அசௌகரியம்
  • தலைவலி
  • வயிற்று வலி
  • தசை வலி
  • நீரிழிவு
  • மலச்சிக்கல்
  • தலைச்சுற்று
  • தோல் பிரச்சனைகள்
  • பலவீனம்
  • குமட்டல்
  • தசைபிடிப்பு நோய்

முன்னெச்சரிக்கைகள்:

  1. எலக்ட்ரோலைட் கோளாறுகள் அல்லது கட்டுப்படுத்தப்படாத வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் இம்மருந்தை மருத்துவரின் அனுமதி இல்லாமல் உட்கொள்ளுதல் கூடாது.
  2. கண்கள் அல்லது தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இம்மருந்தை பயன்படுத்தக்கூடாது.
  3. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இம்மருந்தை உட்கொள்ளுதல் கூடாது.
  4. இம்மருந்தை உட்கொண்டு குறைந்தது 2 மணி நேரம் வரை அமில அடங்கிய உணவுகளை எடுத்து கொள்ளுதல் கூடாது.
  5. மேலும், ஒவ்வாமை எதிர்வினைகள், கடுமையான சிறுநீரக கோளாறு மற்றும் கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவரின் அனுமதி இல்லாமல் இம்மருந்தை உட்கொள்ளுதல் கூடாது.

மருந்தளவு:

இந்த மாத்திரையை தண்ணீரில் தான் விழுங்க வேண்டும். மேலும் மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கோல் வேண்டும்.

உணவு மற்றும் வாழ்க்கை முறை:

  • உங்களின் உயரத்திற்கான எடையை வைத்திருங்கள்.
  • உங்களின் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யுங்கள்.
  • ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
  • புகைபிடிப்பதை தவிர்த்து விடுங்கள்.
  • மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.

பிண்ட தைலத்தில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement