Roxid Syrup Uses in Tamil
அனைவருக்கும் வணக்கம்..! இந்த பதிவின் வாயிலாக முக்கியமான ஒரு மருந்தை பற்றி தான் பார்க்க போகிறோம்..! அது என்ன தெரியுமா..? Roxid Syrup இது ஒரு சிரப் தான். இது அதிகமாக குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். குழந்தைகள் என்றால் நாம் அனைவருமே அதிக அக்கறை செலுத்துவோம் அல்லவா..! ஏனென்றால் அவர்களுக்கு நம்முடைய உடல் போல் இருக்காது. ஆகவே தான் அதற்கு நாம் அதிகம் கவனம் செலுத்துவோம்..!
சரி உங்களில் யாருக்கு தெரியும் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் மருந்துகள் அனைத்தும் எதற்கு என்று தெரியுமா..? ஒரு சிலருக்கு தெரியும் ஒரு சிலருக்கு தெரியாது. ஆனால் இனி மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் மருந்துகளை பற்றி ஏன் எதற்கு இந்த மாத்திரை என்று அவர்களின் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் அல்லது நம்முடைய கையில் தான் உலகமே உள்ளது.
அதாவது ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் நீங்கள் வாங்கும் மருந்துகளை Search செய்து தெரிந்துகொள்ளலாம்..! ஒவ்வொரு மாத்திரையை பற்றி தினமும் ஒரு பதிவுகளை உங்களுக்காக பதிவிட்டு வருகிறது Pothunalam.com. எனவே இந்த பதிவின் வாயிலாக Roxid Syrup பற்றிய பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..
Roxid Syrup Uses in Tamil:
மருந்து மேக்ரோலைட் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் குழுவுக்கு சொந்தமானது. சிறுநீர்ப் பாதை மற்றும் தோலின் உட்புற அடுக்குகளில் பாக்டீரியா தொற்றைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் இந்த மருந்து பயன்படுகிறது.
மேலும் இது தொண்டை அழற்சி, கீழ் சுவாசக் குழாய் அழற்சி, செவி அழற்சி, மூச்சுக்குழலறை அழற்சி, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நுரையீரல் நோய் போன்ற சுவாச தொற்றுகளையும் சிகிச்சையளிக்கிறது.
Roxid Syrup பக்கவிளைவுகள்:
- குமட்டல் அல்லது வாந்தி
- கடுமையான வயிற்று வலி
- கடுமையான வயிற்றுப்போக்கு
- வாய் புண்கள்
- யோனி புண்
- தோல் வெடிப்பு
- தலைவலி
- காதுகளில் ஒலித்தல் அல்லது கத்தும் உணர்வு
- பசி குறைதல்
மேல் கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் அனைத்தும் அனைவருக்கும் ஏற்படும் என்று சாத்தியம் இல்லை. நாம் சாப்பிடும் மாத்திரையில் உள்ள சத்துக்களை ஏற்கும் அளவிற்கு உடலில் பலம் இல்லை என்றால் உடலில் இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |