Roxithromycin Tablet Uses in Tamil
பொதுவாக உடல்நிலை குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தானாக உட்கொள்ள கூடாது. அது போல நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளில் நன்மைகள் போலவே தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் மாத்திரைகளில் உள்ள நன்மை மற்றும் தீமைகளை பதிவிட்டு வருகிறோம்.அந்த வகையில் இன்றைய பதிவில் Roxithromycin மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Roxithromycin Tablet Uses:
இந்த மாத்திரையானது காது மூக்கு மற்றும் தொண்டை நோய்த்தொற்று, நுரையீரல் மற்றும் சுவாசப்பாதை தொற்று, தோல் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை நோய்த்தொற்று போன்ற உடலின் பல்வேறு பகுதிகளில் பாக்டீரியா தொற்றுக்களை சரி செய்ய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Roxithromycin Tablet Side Effects:
- தலைவலி
- மயக்கம்
- குமட்டல் மற்றும் வாந்தி
- பசியின்மை
- வயிற்றுவலி
- வயிற்றுப்போக்கு
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதும் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Flavoxate மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
இந்த மாத்திரையானது மயக்கத்தை ஏற்படுத்தும், அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும், மேலும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவற்றை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Lactare மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது.. அதன் பக்க விளைவுகள் பற்றி காண்போம்..
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |