சைபால் மருந்து பயன்கள் | Saibol Uses in Tamil

Saibol Uses in Tamil

சைபால் மருந்து | Saibol Cream Uses in Tamil

வணக்கம் நன்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் சைபால் மருந்து எதற்காக பயன்படுத்தப்படுகிறது, அதை பயன்படுத்துவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் மற்றும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி பார்க்கலாம். இந்த மருந்து அதிகமாக வெளிப்புற காயங்களுக்கு அதாவது Ointment-ஆக பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து மதுரையில் 1937-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த மருந்தில் ஜிங்க் ஆக்சைட் 5%, போரிக் ஆக்சைட் 5%, சாலிசிலிக் ஆசிட் 2%, Sulfacetamide Sodium 2% மற்றும் White Soft Paraffin போன்ற வேதிப்பொருள்கள் உள்ளது. இப்பொழுது நாம் சைபால் மருந்து எதற்காக பயன்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

சைபால் மருந்து பயன்கள்:

saibol cream uses in tamil

 • முகத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் மருக்களை குணப்படுத்த உதவுகிறது.
 • பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்பு, சேற்று புண் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
 • சிராய்ப்பு, கொப்பளங்கள், சிறு காயங்கள் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
 • எக்ஸிமா என்று சொல்ல கூடிய தோல் அரிப்பு, தோல் சிவந்து போதல் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
 • Scabies, தொடை மற்றும் கையில் ஏற்படக்கூடிய அரிப்பு போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

Saibol Cream Uses in Tamil – சைபால் நன்மைகள்:

 • தோல் அழற்சி, தோல் வறட்சியால் ஏற்படும் நோய்கள், சொறி சிரங்கு, போன்ற தோல் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் பயன்படுகிறது.
 • Fungus-ஆல் ஏற்படும் படை போன்றவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது.
 • வெட்டுக்காயம், தீக்காயம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

Saibol Ointment Uses in Tamil:

 1. இதில் இருக்கும் வேதிப்பொருள்கள் தோலிற்கு எந்த விதமான எரிச்சலையும், பக்க விளைவுகளையும் தருவதில்லை.
 2. பக்க விளைவுகள் இந்த மருந்தில் அதிக அளவு இல்லை. இருப்பினும் எந்த மருந்தையும் குறைந்த அளவு பயன்படுத்துவது நல்லது.
 3. குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.
 4. இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முன்னர் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தை மிதமான வெந்நீரால் கழுவி கொள்ளவும். பின் இந்த மருந்தை பாதிப்புள்ள இடத்தில் பொறுமையாக தடவவும். பெரும்பாலும் காலை அல்லது மாலை நேரத்தில் பயன்படுத்துவது சிறந்தது.
எலும்பு தேய்மானம் குணமாக இதை விட வேறு மருந்து தேவை இல்லை
குளோர்பெனிரமைன் மாத்திரை பயன்கள்

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>மருந்து