Salbutamol Tablet Uses in Tamil
நம்முடைய தாத்தா பாட்டிகள் எல்லாம் வாழ்ந்த வாழ்க்கையானது ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஏதும் உடலில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஆங்கில மருந்துகளை எடுத்து கொள்ளாமல் மூலிகைகளை தான் எடுத்து கொண்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பிறந்த குழந்தைக்கே உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு அவர்கள் ஆங்கில மருந்துகளை தான் எடுத்து கொள்கிறார்கள். இதில் நன்மைகள் மட்டுமில்லை தீமைகளும் இருக்கிறது. அதனால் நீங்கள் எடுத்து கொள்ளும் மாத்திரையின் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டையும் அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் salbutamol மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!
Salbutamol Tablet Uses:
ஒவ்வொரு மாத்திரையும் ஒவ்வொரு பிரச்சனைக்காக பயன்படுகிறது. அதில் salbutamol மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்று அறிந்து கொள்வோம் வாங்க..
இந்த மாத்திரையானது ஆஸ்துமா, சிஓபிடி, மூச்சு குழாய் அலர்ஜி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Salbutamol Tablet Side Effects:
- குமட்டல்
- வாந்தி
- ஓய்வின்மை
- நடுக்கம்
- தலைவலி
- தசை இறுக்கம்
- தொண்டை வறட்சி அல்லது புண்
- மயக்கம்
- தூக்கம்
- படபடப்பு
- இருமல்
- இதய துடிப்பு அதிகமாக இருப்பது
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை மேல் கூறியுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
Cipmox 500 மாத்திரையை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா
முன்னெச்சரிக்கை:
இந்த மாத்திரை எடுத்து கொள்வதால் மயக்கம் மற்றும் தூக்க பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அவ்வப்போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் கர்ப்பமாக இருந்தால் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
Salbutamol மாத்திரையானது மயக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
மருந்தளவு:
இந்த மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |