Saridon Tablet Uses
நம் முன்னோர்கள் காலத்தில் உணவே மருந்தாக இருந்தது. அதனால் அவர்கள் அனைவரும் எந்த விதமான நோய் தாக்குதலும் இல்லாமல் குறைந்தப்பட்சம் 60 வயது வரை ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது இந்த நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மால் ஒரு சிறிய தலைவலி மற்றும் இடுப்பு வலியினை கூட தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு ஏதாவது ஒரு வலி ஏற்பட்டால் நாம் உடனே கடைகளில் விற்கும் மாத்திரையினை எடுத்துக்கொண்டு அவ்வழியினை குறைத்து விடுகிறோம். இவ்வாறு நாம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக அப்படி அந்த மாத்திரையில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை ஒரு நிமிடம் சிந்தித்து பார்ப்பது நல்லது. ஏனென்றால் எதையும் நாம் வரும் முன் காத்து அதற்கு ஏற்றவாறு வாழ்வதே நல்லது. எனவே இன்று சாரிடான் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
சாரிடான் மாத்திரை பயன்படுத்துகிறது:
சாரிடான் மாத்திரை தலைவலி, மூட்டு வலி, காது வலி, முதுகு வலி மற்றும் இதர வலிகளுக்கும் தீர்வு அளிக்கக்கூடிய ஒரு மருந்தாக இது பயன்படுகிறது.
மருந்தின் அளவு:
இந்த மாத்திரையினை நம்முடைய உடலில் காணப்படும் வலியினை குறைப்பதற்கு எடுத்துக்கொள்ளும் போது ஒருவர் 1 மாத்திரைக்கு மேல் அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது.
அதேபோல் இந்த மாத்திரையினை தண்ணீருடன் மட்டும் தான் முழுங்க வேண்டும். இவ்வாறு இல்லாமல் டீ ,மற்றும் காபியுடன் எடுத்துகொள்ள கூடாது.
மருந்து எடுத்துக்கொள்ளும் முறை:
Saridon மாத்திரையினை உணவு சாப்பிட்ட பிறகு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Diclovik Plus மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
Saridon Tablet Side Effects:
- காய்ச்சல்
- வயிற்று போக்கு
- குமட்டல்
- மூச்சு விடுவதில் சிரமம்
- ஒழுங்கற்ற இதய துடிப்பு
- உடம்பு அலர்ஜி
- வாந்தி
- மனக் கவலை
சாரிடான் மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொண்ட பிறகு மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
இதயம் பிரச்சனை உள்ளவர்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பிரச்சனை உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இவர்கள் அனைவரும் Saridon மாத்திரையினை எடுத்துக்கொள்வதற்கு முன்பாக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |