Shilajit in Tamil | சிலாஜித் சாப்பிடும் முறை | Shilajit in Tamil Name
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாம் Shilajit என்றால் என்ன.? அதன் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன.? பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. Shilajit என்ற வார்த்தையை நாம் அனைவருமே கேட்டு இருப்போம். ஆனால் அதனை பற்றிய விவரங்கள் பற்றி நம்மில் பலபேருக்கும் தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் Shilajit பற்றி விவரித்துள்ளோம். வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஷிலாஜித் என்பது ஒரு மருந்து பொருளாகும். இது, ஒட்டும் தார் போன்ற பிசின் போன்று இருக்கும். ஷிலாஜித் பிசின் என்பது இமயமலையில் இருந்து எடுக்கப்படுகிறது. அதனை பற்றி சற்று விரிவாக பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
குறிப்பு: எந்த ஒரு மாத்திரை மற்றும் மருந்தையும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
Shilajit in Tamil Name:
Shilajit (ஷிலாஜித்) என்பது, இமையமலையில் இருக்கும் பாறைகளில் இருக்கும் மட்கிய மற்றும் சிதைந்த தாவர எச்சங்களிலிருந்து எடுக்கப்படும் கனிம சுருதி ஆகும். இந்தியாவில் ஷிலாஜித் பிசினை நிலக்கீல் பஞ்சாபினம், கருப்பு பிடுமின், கனிம சுருதி, சிலஜத், ஷிலஜது, சிலஜது, கன்மந்தம், சைலேய ஷைலஜா, மூமி, மூமியோ, பஞ்சாபினம், மேமியா, ஷிலதாதுஜா, அட்ரிஜா, ஷிலாஸ்வேதா, ஷிலாநிர்யாசா, அஸ்மஜா, ஷிலாமயா, ஷிலாமயாரே க்லாஜா, ஷிலாமயாரே க்லாஜா போன்ற பெயர்களில் அழைப்பார்கள்.
Trypsin Chymotrypsin மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Shilajit in Tamil Meaning:
.ஷிலாஜித் ஆனது, கரி கருப்பு அல்லது பழுப்பு நிற நிழல் கொண்ட ஜெல் போன்று இருக்கும். இது முற்றிலும் பார்ப்பதற்கு தார் போன்று இருக்கும். ஷிலாஜித்தில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த்துள்ளது. தாமிரம், வெள்ளி, துத்தநாகம், இரும்பு மற்றும் ஈயம் உட்பட 84 க்கும் மேற்பட்ட தாதுக்களைக் கொண்டுள்ளது. ஷிலாஜித் பிசினை நீங்கள் பூட்டான், காஷ்மீர், கில்கிட், ஜப்பான் மற்றும் திபெத்தின் உயரமான மலைகளில் இருந்து எளிதாக பெறலாம்.
Shilajit Uses in Tamil:
Shilajit ஆனது உயர்நிலை பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடிக்கடி ஏற்படும் நுரையீரல் எடிமா, மூளையில் வீக்கம், உடலில் ஆக்சிஜனின் குறைபாடு, சோம்பல் உணர்வு போன்ற பிரச்சனைகளுக்காக சிலாஜித் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Shilajit Benefits in Tamil:
- மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது.
- ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- பாலியல் ஆரோக்கியம் மேம்படும்.
- வயது முதிர்வை தாமதப்படுத்துகிறது.
- முடியின் தரத்தை மேம்படுத்துகிறது.
- இரத்த சோகை பிரச்சனையை போக்குகிறது.
- நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.
- உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்துகிறது.
Shilajit Side Effects in Tamil:
- உடலில் எரியும் உணர்வை ஏற்படுத்தும்.
- சில நேரங்களில் போதையை ஏற்படுத்தும்.
Sildenafil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது
யாரெல்லாம் இதனை பயன்படுத்தக்கூடாது.?
- பொதுவாக, Shilajit -ஐ மருத்துவரின் அனுமதி இல்லாமல் யாரும் உட்கொள்ள கூடாது.
- கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண்கள் ஷிலாஜிட்டைப் பயன்படுத்தக்கூடாது.
- முடக்கு வாதம் போன்ற நோய் எதிர்ப்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் ஷிலாஜிட்டைப் பயன்படுத்த கூடாது.
- நீரிழிவு நோயாளிகள் இதனை பயன்படுத்தக்கூடாது.
சிலாஜித் சாப்பிடும் முறை:
- ஷிலாஜித் பிசினை நீங்கள் தூள் வடிவில் எடுத்துக்கொண்டால், சிறிதளவு தூளினை பாலுடன் கலந்து உணவுக்கு முன் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்து கொள்ளுங்கள்.
- ஷிலாஜித் காப்ஸ்யூல் ஆக பயன்படுத்தினால், பாலுடன் சேர்த்து விழுங்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை விழுங்க வேண்டும்.
- ஷிலாஜித் டேப்லெட் ஆக, எடுத்துக்கொண்டால் உணவுக்குப் பிறகு வெதுவெதுப்பான பாலுடன் விழுங்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை விழுங்க வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |