Sinemet Tablet Uses in Tamil
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் Sinemet மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம். நாம் அனைவருமே உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு சென்றோ அல்லது மருந்தகத்திலோ மருந்தினை வாங்கி உட்கொள்வோம். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு வகையான மருந்துகள் உள்ளது. அந்த வகையில் நீங்கள் Sinemet மாத்திரையை வாங்கினால் அம்மாத்திரை என்ன நோய்க்கு மருந்தாக அளிக்கப்படுகிறது மற்றும் அதனை உட்கொண்டால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொண்டு உட்கொள்வது நல்லது. எனவே Sinemet மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பின்வருமாறு விவரித்துள்ளோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
What are Sinemet Tablets Used For:

சினிமெட் மாத்திரை சினிமெட்டில் கார்பிடோபா மற்றும் லெவோடோபா ஆகியவற்றின் கலவை ஆகும். இது தசை விறைப்பு, நடுக்கம், தசை பிடிப்பு மற்றும் மோசமான தசைகட்டுப்பாடு போன்ற பார்கின்சன் நோயிற்கு சிகிச்சையளிக்க மருந்தாக பயன்படுகிறது.
Sinemet Side Effects in Tamil:
Sinemet மாத்திரை சிலருக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
- படை நோய்.
- சுவாசிக்க கடினப்படுதல்.
- முகம், உதடு, நாக்கு மற்றும் தொண்டையில் வீக்கம்.
- முகத்தில் கட்டுப்பாடற்ற அசைவுகள் (உதடு துடித்தல், கண் சிமிட்டால் போன்ற பல)
- அதிகமாக நடுக்கம்.
- வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி.
- மனசோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்கள்.
Atenolol மாத்திரையை அதிக அளவு பயன்படுத்துபவரா.. அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி..?
பொதுவான பக்கவிளைவுகள்:
- தலைவலி அல்லது தலைசுற்றல்
- குறைந்த இரத்த அழுத்தம்
- தூக்கமின்மை
- குமட்டல், வாந்தி மற்றும் மலசிச்க்கல்
எச்சரிக்கைகள்:
- உங்களுக்கு குறுகிய கிளௌகோமா நோய் (கண் சம்மந்தப்பட்ட நோய்) Sinemet மாத்திரையை பயன்படுத்தக்கூடாது.
- கடந்த 14 நாட்களில் MAO (monoamine oxidase) போன்ற தடுப்பூசிகளை போட்டு இருந்தால் இம்மருந்தினை உட்கொள்ளக்கூடாது.
- இதய நோய், உயர் இரத்த அழுத்தம், அல்லது மாரடைப்பு
- கல்லீரல் அல்லது சிறுநீரக நோய்
- ஆஸ்துமா அல்லது பிற சுவாசக் கோளாறுகள்
- வயிறு அல்லது குடல் புண்
- மனச்சோர்வு அல்லது மனநோய்.
மேலே கூறியுள்ள பிரச்சனைகள் உள்ளவர்கள் Sinemet மாத்திரையை மருத்துவரின் அனுமதி இல்லாமல் உட்கொள்ளக்கூடாது.
அசித்திரால் 500 டேப்லெட் பயன்கள்
| இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |














