Soframycin Cream Uses in Tamil
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மருந்தும் ஒன்றாகிவிட்டது. முன்பெல்லாம், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் மருந்து எடுத்து கொள்வார்கள். ஆனால் இப்போது, மருந்து சாப்பிட்டுவிட்டு தான் உயிரே வாழ்கிறார்கள். ஆமாங்க.. நம் உடலில் ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனை இருந்தால் மருந்தினை சாப்பிட்டு மட்டுமே உயிர்வாழும் காலகட்டத்தில் இருக்கின்றோம். நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் மருந்தை சில நாட்கள் சாப்பிடாமல் நிறுத்திவிட்டால் மீண்டும் உடல்நிலை ரொம்ப முடியாமல் போய்விடுகிறது. அதுமட்டுமில்லாமல், நாம் உட்கொள்ளும் மருந்தே நமக்கு பலவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே, நாம் எந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்பு அம்மருந்து எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது..? இம்மருந்தை சாப்பிட்டால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா..? உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். எனவே நீங்கள் Soframycin கிரீம் பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால் அம்மருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
What is Framycetin Skin Cream Used For:
Soframycin க்ரீம் ஆனது, பாக்டீரியா தொற்ற்றினால் உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் புண்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்தாக பயன்படுகிறது. இவற்றின் மேலும், பயன்பாடுகள் பின்வருமாறு:
- தோல் புண்கள் பாக்டீரியா தொற்று
- கண் அல்லது காதின் பாக்டீரியா தொற்று
- வெளிப்புற இடைச்செவியழற்சி
- மேலோட்டமான கண் நோய்
Combiflam சிரப்பின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
பக்கவிளைவுகள்:
Soframycin ஒரு சிலருக்கு பின்வரும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, இதுபோன்ற பக்கவிளைவுகளை அதிகமாக சந்தித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
- தோல் தடித்தல்
- தொழில் அரிப்பு
- காதின் உட்புறச் சேதம்
- தொழில் எரிச்சல் உணர்வு
முன்னெச்சரிக்கை:
Soframycin க்ரீமை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது. முக்கியமாக, குழந்தைகளுக்கு இம்மருந்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
Fourderm கிரீம் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |