Sompraz d 40 Capsule Uses in Tamil
நம்முடைய தாத்தா பாட்டிகள் எல்லாம் 70 வயதை தாண்டியும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் கருவில் இருக்கும் போதே குழந்தைக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் தான். எப்படியென்றால் சரியான நேரத்திற்கு உணவுகளை உட்கொள்வதில்லை. அதுமட்டுமில்லாமல் ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்து கொள்வதில்லை. சரியாக தண்ணீர் குடிப்பதில்லை முக்கியமாக சரியான நேரத்திற்கு தூங்குவதில்லை. இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் நம்முடைய முன்னோர்கள் எல்லாம் ஆரோக்கியமான உணவு முறையும், வாழ்க்கை முறையும் பின்பற்றினார்கள். இதனால் உடலில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.
உடல்நல பிரச்சனைக்காக எடுத்து கொள்ளும் மாத்திரைகள் மற்றும் மருந்துகள் நம்முடைய பிரச்சனையை சரியாக்குவதோடு மட்டுமில்லாமல் நம்முடைய உடலில் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. அதனால் நீங்கள் எடுத்து கொள்ளும் ஒவ்வொரு மாத்திரை மற்றும் மருந்துகளை பற்றி அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Sompraz d 40 மாத்திரையை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: எந்த ஒரு மாத்திரை மற்றும் மருந்தையும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
Sompraz d 40 Capsule Uses:
நம்முடைய உடலில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைகளும் ஒவ்வொரு மருந்து கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் Sompraz d 40 மாத்திரையானது அஜீரண பிரச்சனை, அல்சர் பிரச்சனை, இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
Sompraz d 40 Side Effects:
- வயிற்று வலி
- வயிற்றுப்போக்கு
- தலைவலி
- வாய்வு பிரச்சனை
- வாய் வறண்டு காணப்படுதல்
மேலே கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும், மேலும் உங்களுக்கு வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
Telma 40 பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
முன்னெச்சரிக்கை:
- கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
- நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் மாத்திரைகள் ஏதும் எடுத்துக்கொண்டு அதனால், உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தாலும் அதனை பற்றியும் மருத்துவரிடம் கூற வேண்டும்.
மருந்தளவு:
மருத்துவர் கூறிய அளவில் தான் மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டும், ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.
ஏதேனும் ஒரு நேரத்தில் மருந்து, மாத்திரைகளை எடுத்து கொள்வது பிரச்சனை இல்லை, ஆனால் வாழ்க்கை முழுவதும் மாத்திரை எடுத்து கொள்ளும் நிலை ஏற்பட்டால் பக்க விளைவுகளையும் சந்திக்க நேரிடும், அதனால் ஆரோக்கியமான உணவையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் பின்பற்றுவது அவசியமானது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |