Sparfloxacin Tablet Uses
மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் உடல்நிலை சரி இல்லாமல் போகும் நிலைமை ஏற்படுகிறது. இவ்வாறு உடல்நிலை சரி இல்லை என்றால் நாம் உடனே மருத்துவரை பார்த்து மருந்துகளை வாங்கி சாப்பிடுவோம் அல்லது மெடிக்கல் ஷாப்பில் மருந்துகளை வாங்கி சாப்பிடுவோம். இத்தகைய முறையானது நமக்கு பழக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. அதாவது மாத்திரையினை எடுத்துக்கொண்டால் உடல்நிலை சரியாகிவிடும்என்பது நம்முடைய கருத்தாகவே உள்ளது. ஆனால் நாம் சாப்பிடும் எந்த மாத்திரையாக இருந்தாலும் அதில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதில் பாதி அளவிற்கு பக்க விளைவுகளும் உள்ளது. இதுபோன்ற பக்கவிளைவுகளை பற்றி நாம் தெரிந்துக்கொள்வது இல்லை. அந்த வகையில் Sparfloxacin என்ற மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க…!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
ஸ்பார்ஃப்ளோக்சசின் மாத்திரையின் பயன்கள்:
- காச நோய்
- காதுகளில் தொற்று
- பாக்டீரியா பிரச்சனை
- சைன்ஸ் பிரச்சனை
- தோல்களில் அலர்ஜி
- நரம்புகளில் தொற்று
- தொண்டையில் அலர்ஜி
- நுரையீரல் அலர்ஜி
- மூச்சுக்குழாய் அலர்ஜி
மேலே சொல்லப்பட்டுள்ள நோய்கள் அனைத்திற்கும் நல்ல தீர்வினை அளிக்கக்கூடிய ஒன்றாக ஸ்பார்ஃப்ளோக்சசின் மாத்திரை இருப்பதால் இது மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.
மேலும் இந்த மாத்திரையினை மருத்துவர்கள் கூறிய அளவிலே மட்டும் தான் எடுத்துகொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் குறைந்த அளவிலோ அல்லது கூடுதலான அளவிலோ எடுத்துகொள்ள கூடாது.
Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
பக்க விளைவுகள்:
- வயிற்று வலி
- தோல்களில் வெடிப்பு
- தூக்கமின்மை
- வாயு பிரச்சனை
- குமட்டல் அல்லது வாந்தி
- தலைவலி
- மலச்சிக்கல்
- வயிற்றுப்போக்கு
- வாய்ப்புண்
- தலைசுற்றல்
- மூட்டு வலி
மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் உடனே தெரிவிக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
- கர்ப்பிணி பெண்கள்
- மது அருந்துபவர்
- சிகரெட் பிடிப்பவர்
மேலே சொல்லப்பட்டுள்ள நபர்களுக்கு மருத்துவர் ஸ்பார்ஃப்ளோக்சசின் மாத்திரையினை பரிந்துரை செய்தால் உங்களுடைய தற்போதைய நிலமையினையும், நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு முறை மற்றும் மருந்துகளின் முறையினையும் தெளிவாக கூற வேண்டும்.
Aciloc 150 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |