Spironolactone Tablet Uses in Tamil
வணக்கம் நண்பர்களே.. நம் பொதுநலம் பதிவின் மூலம் தினமும் பல பயனுள்ள பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அதேபோல் இப்பதிவில் ஒரு அருமையான பதிவை பற்றி பார்க்கலாம். அதாவது, Spironolactone மாத்திரையின் பயன்கள் மற்றும் அதன் பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பொதுவாக பெரும்பாலான மாத்திரைகள் கசப்பு தன்மையுடன் இருப்பதால் மாத்திரை சாப்பிடுவதை அனைவரும் விரும்ப மாட்டோம். இருந்தாலும் உடலில் ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனை ஏற்பட்டால் வேறு வழியில்லாமல் உட்கொண்டு தான் வருகிறோம். அப்படி நிங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு மருந்தும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எந்தவொரு மருந்தையும் உட்கொள்வதற்கு முன்பாக அதனை பற்றி தெரிந்து கொள்வது நல்லது. அந்த வகையில் இப்பதிவில் Spironolactone மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
What is Spironolactone Tablet Used For:
Spironolactone மாத்திரையை ஆனது, உயர் இரத்த அழுத்தம், இதய செயலிழப்பு, நீர்த்தேக்கம் மற்றும் குறைந்த பொட்டாசியம் அளவுகளுக்கு சிகிச்சையளிக்க மருந்தாக பயன்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், அட்ரீனல் சுரப்பிகளால் அதிகப்படியான ஆல்டோஸ்டிரோன் (ஹார்மோன்) உற்பத்தி செய்யப்படும் ஒரு நிலையை குணப்படுத்தவும் பயன்படுத்தவும் பயன்படுகிறது.
Disulfiram மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா
பக்க விளைவுகள்:
spironolactone மாத்திரையை உட்கொள்ளும் ஒரு சிலருக்கு பின்வரும் பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஆகவே, இதுபோன்ற பக்க விளைவுகள் ஏதும் இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
- வாய் வறட்சி அடைதல்
- தலைவலி
- தலைசுற்றல்
- தலைவலி
- மயக்கம்
- சோர்வு
- மார்பக புண்
- மார்பக கட்டிகள்
- மாதவிடாய் கோளாறுகள்
- ஆண்களுக்கு இயற்கைக்கு மாறாக பெரிய மார்பகங்கள் உருவாகுதல்
- கல்லீரல் பிரச்சினைகள்
- தோல் அரிப்பு
Spironolactone மாத்திரையை யாரெல்லாம் உட்கொள்ள கூடாது.?
இதயம், கல்லீரல், மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இம்மருந்தை பயன்படுத்துதல் கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இம்மருந்தை உட்கொள்ளுதல் கூடாது.
ஓட்டுநர்கள் இம்மருந்தை உட்கொண்டு வாகனத்தை இயக்க கூடாது.
Cipladine ஆயின்மென்ட் எதற்கு பயன்படுகிறது என்று தெரியுமா
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |