T Bact Ointment Uses in Tamil | T Bact Ointment Side Effects in Tamil
இன்றைய காலத்தை பொறுத்த வரை தொழிநுட்பம் மட்டும் இல்லாமல் மருத்துவ துறையும் மிக வேகமாக வளர்ந்து விட்டது. நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் உடலில் எதுவும் அவ்வளவாக பிரச்சனை வராது. ஏனென்றால் அவர்கள் அந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஒருவேளை உடம்பில் கடுமையான அளவிற்கு வேறு ஏதாவது பிரச்சனை என்றால் அதனை சரி செய்வது நம் முன்னோரகள் காலத்தில் சாத்தியமானதாக இல்லை. ஆனால் இந்த நவீன காலத்தில் எப்படிப்பட்ட நோயினை ஓரளவிற்கு சரி செய்யும் மருந்து மாத்திரைகள் இருக்கிறது. இதுமாதிரி நாம் பயன்படுத்தும் மருந்துகளில் நன்மைகள் இருப்பது போல சில பக்க விளைவுகளும் இருக்கிறது. இது பலருக்கு தெரியாமலும் இருக்கிறது. அதனால் பலரும் பயன்படுத்தக்கூடிய T-bact கிரீமின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
T bact Ointment Uses in Tamil:
- நாம் பயன்படுத்தும் ஆயின்மென்ட்டுகளில் T bact-ம் ஒன்று. இது உடலில் ஏற்படும் காயம் மற்றும் உடம்பில் ஏற்படும் சிரங்கு போன்றவற்றையினை குணப்படுத்த உதவுகிறது.
- அதுமட்டும் இல்லமல் தோலில் பூஞ்சைகள் தொற்றினால் ஏற்படும் அலர்ஜியினை சரி செய்யவும் பயன்படுகிறது. அதனால் இதனை பல மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்கிறார்கள்.
- இந்த களிம்பினை உடலின் மேற்புறத்தில் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். அதுபோல முகத்தில் மற்ற பகுதிகளில் படாதவாறும் பார்த்து கொள்ள வேண்டும்.
- இத்தகைய களிம்பு நிறைய வகையான காயங்களுக்கு பயன்படக்கூடியதாக இருந்தாலும் கூட இதனை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக்கூடாது.
- அதேபோல மருத்துவர் கூறிய அளவை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பயன்படுத்த கூடாது. மேலும் குழந்தைகளுக்கு மருத்துவரை கேட்டு தான் பயன்படுத்த வேண்டும்.
Flexiflam மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..! |
இதன் பக்க விளைவுகள்:
- உடலில் எரிச்சல் உணர்வு
- உதட்டில் வீக்கம்
- அரிப்பு
- உடலில் சிவப்பு
- தடித்து போதல்
- கண்களில் வீக்கம்
- தோலில் வறட்சி
மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் உங்களுக்கு வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தாலும் அதனை மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
Ascoril LS Syrup பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா..? |
இதன் முன்னெச்சரிக்கைகள்:
- கர்ப்பிணி பெண்கள்
- குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
- கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
- சிறுநீரகம் பிரச்சனை உள்ளவர்கள்
- குழந்தைகள்
மேலே கூறியுள்ள நபர்களுக்கு மருத்துவர் T bact களிம்பினை ஆலோசனை செய்து நீங்கள் அதனை பயன்படுத்தும் போதும் மேலே கூறப்பட்டுள்ள முன்னெச்செரிக்கைகள் உங்களுக்கு தோன்றினால் உடனே இந்த களிம்பினை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு மருத்துவரிடம் கூற வேண்டும்.
அதுமட்டும் இல்லாமல் மருத்துவர் உங்களுக்கு இந்த களிம்பினை ஆலோசனை செய்வதற்கு முன்பாகவே தற்போது நீங்கள் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் முறையை பற்றியும் உணவு முறை பற்றியும் தெளிவாக கூறுவது அவசியம்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தி நிற்க இந்த மாத்திரை சரியானதா..?
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |