Tadalafil Tablet Uses in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அது போல இப்போது இருக்கும் இந்த சூழலில் நாம் தான் நம் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க வேண்டும். காரணம் இப்போது இருக்கும் சூழல் மிகவும் மோசமானதாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் காற்று மாசும், நீர் மாசும், சுற்றுச்சூழல் மாசும் தான் காணப்படுகிறது. அதிலும் இந்த கால கட்டத்தில் புதிது புதிதாக நோய்களை தான் கண்டறிந்து வருகிறார்கள். ஆகவே இப்படி ஒரு சூழலில் நம் உடலில் ஏதாவது சிறிய அறிகுறி தென்பட்டாலும் அவ்வளவு பயமாக இருக்கும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரியப்படுத்தி கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று Tadalafil Tablet Uses in Tamil பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
மோனோரின் 150 Mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..
Tadalafil Tablet Uses in Tamil – பயன்கள்:
இந்த Tadalafil Tablet ஆனது இரத்த நாளச் சுவர்களில் இருக்கும் தசைகளைத் தளர்த்துவதற்கு திறம்பட உதவுகிறது. இதனால் உடலில் சில பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தை வெற்றிகரமாக அதிகரிக்கிறது. இந்த மருந்து விறைப்புத்தன்மைக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இது ஆண்மைக் குறைவு மற்றும் தீங்கற்ற புரோஸ்டேடிக் ஹைபர்டிராபி என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் இது சிறுநீர் அறிகுறிகளைப் போக்க புரோஸ்டேட் சுரப்பி மற்றும் சிறுநீர்ப்பையில் உள்ள தசைகளை தளர்த்த உதவுகிறது. தடாலஃபில் (Tadalafil) நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்த சிகிச்சையிலும் உதவுகிறது, அத்துடன் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் உடற்பயிற்சி செய்யும் திறனை திறம்பட அதிகரிக்கிறது.
- நுரையீரல் உயர் இரத்த அழுத்தம்
- விறைப்பு குறைபாடு
Ebastine மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..
Tadalafil Tablet – பக்க விளைவுகள்:
இந்த Tadalafil Tablet ஆனது சில நேரங்களில் சில விதமான பக்க விளைவுகளை உண்டாக்குகிறது. அது என்னென்ன பக்க விளைவுகள் என்று கீழே காண்போம்.
- குழப்பம் மற்றும் தலைச்சுற்றல்
- மயக்கம்
- மார்பில் வலி அல்லது அசௌகரியம்
- செவித்திறன் இழப்பு
- வாந்தியுடன் சேர்ந்து குமட்டல் உணர்வு
- வியர்வை மற்றும் பலவீனம்
- சுவாச பிரச்சினைகள்
- நெஞ்செரிச்சல்
- ஏப்பம்
- அஜீரணம்
- வயிறு அல்லது கழுத்தில் வலி
- காய்ச்சல்
- இரைப்பை அழற்சி
ஆகவே நீங்கள் மேல்கூறிய Tadalafil மாத்திரை சாப்பிடும் போது மேல்கூறிய பக்க விளைவுகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
Montex மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..
Tadalafil Tablet – பயன்படுத்தும் முறை:
நீங்கள் எடுத்து கொள்ளும் இந்த மருந்தின் விளைவானது சராசரியாக 36-40 மணி நேரம் நீடிக்கும்.
இந்த Tadalafil மாத்திரையை நீங்கள் வாய் வழியே எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் மாத்திரையை எடுத்து கொண்ட பிறகு 30-60 நிமிடங்களுக்குள் அதனுடைய தாக்கம் இருக்கும்.
அதுபோல ஒருவர் இந்த மருந்தை சரியான நேரத்தில் எடுத்து கொள்ள மறந்துவிட்டால், விட்டுவிடுங்கள். அதற்காக அடுத்து சாப்பிடும் போது ஒன்றுக்கு 2 மாத்திரை சாப்பிட கூடாது.
Tadalafil Tablet – முன்னெச்சரிக்கை:
- கர்ப்பிணி பெண்களுக்கு இந்த Tadalafil மாத்திரை கொடுக்க பரிந்துரைக்கப்படவில்லை.
- பால் கொடுக்கும் தாய்மார்களும் இந்த Tadalafil மாத்திரையை சாப்பிடுவதற்கு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் Tadalafil மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று Tadalafil மாத்திரை சாப்பிட வேண்டும்.
- அதுபோல இதயம் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று Tadalafil மாத்திரை சாப்பிடுவது நல்லது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |