Telma 40 பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Advertisement

Telma 40 uses in tamil

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உடலில் எந்த பிரச்சனையும் வரமால் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றோம். ஆனால் சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் எடுத்து கொள்ளும் உணவு முறையினால் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதற்கு மருத்துவரை நாடி தான் செல்கின்றோம்.

அவர்களும் தங்களின் உடல்நிலைக்கு ஏற்ற மருந்து, மாத்திரைகளை எழுதி தருகிறார்கள். இதனால் நம்முடைய உடலில் உள்ள பிரச்சனைகள் மட்டும் சரியாகுவதில்லை. மாறாக பக்க விளைவுகள் ஏற்படுகிறது. அதனால் நீங்கள் எந்த மருந்தையும் எடுத்து கொள்வதற்கு முன்னால் அதனை பற்றிய தகவலை அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். நம் பதிவில் தினந்தோறும் மருந்து, மாத்திரைகள் பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் telma 40  மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.

Telma 40 Uses in Tamil:

telma 40 side effects in tamil

நாம் சாப்பிடும் எடுத்து கொள்ளும் ஒவ்வொரு மாத்திரையும் ஒவ்வொரு  பிரச்சனையை சரி செய்வதற்கு உதவியாக இருக்கிறது. அந்த வகையில் Telma 40 மாத்திரையானது உயர் இரத்த அழுத்தம், இதய செயலிழப்பு, மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.

பக்க விளைவுகள்:

  • தலைசுற்றல்
  • தலைவலி
  • மயக்கம்
  • மலசிக்கல்
  • வயிறுக்கோளாறு

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும், ஒருவேளை மேல் கூறியுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

இந்த மாத்திரையை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

Telma 40 மாத்திரை எடுத்து கொள்ளும் போது மயக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

மருந்தளவு:

Telma 40 இந்த மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும், ஒருவேளை நீங்கள் மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement