டெல்மிசார்டன் 20 மி.கி மாத்திரை பற்றி யாருக்கும் தெரியாத சில குறிப்புகள்..!

Advertisement

Telmisartan 20 mg Uses in Tamil

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உடல்நல குறைபாடு ஏற்பட்டு கொண்டே தான் உள்ளது. அதனை சரி செய்வதற்காக பலவகையான மருந்து மாத்திரைகளை நாம் பயன்படுத்துவோம். அதாவது ஒரு சிலரின் வாழ்க்கை மருந்துகளில் தான் இயங்கி கொண்டிருக்கின்றது என்றே கூறலாம். ஆனால் நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இந்த நிலை எதுவும் இல்லை. ஏனென்றால் அவர்களின் காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கைமுறை உணவு பழக்கங்கள் அனைத்தும் சரியாக இருந்தது. இன்றைய சூழலில் இவ்விரண்டுமே சரியாக இல்லை. அதனால் நமது உடல்நலத்தை சரிசெய்வதற்கு உதவும் மருந்து மாத்திரைகளை பற்றி நாம் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். எனவே தான் இன்று டெல்மிசார்டன் 20 மி.கி மாத்திரை பற்றிய தகவல்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அந்த மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

கிளிப்பிஸைட் மாத்திரை பற்றிய சில குறிப்புகள்

Telmisartan 20 mg Uses in Tamil:

Telmisartan 20 mg Side Effects in Tamil

இந்த டெல்மிசார்டன் 20 மி.கி மாத்திரையானது உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளின் குடும்பத்தை சேர்ந்தது. அதேபோல் இந்த மருந்தானது பக்கவாதம், மாரடைப்பு, இதயத்தின் நிலைமைகள் மற்றும் மரணம் போன்ற கடுமையான நிலைமைகளின் அபாயத்தை குறைப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

டெல்மிசார்டன் 20 மி.கி மாத்திரையானது ஒரு நபரின் உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள உதவுகின்றது. இந்த மருந்தில் பலவகையான மி.லி உள்ளதால் இதனை மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள்.

அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Enalapril Maleate மாத்திரை பற்றிய தகவல்

Telmisartan 20 mg Side Effects in Tamil:

இந்த டெல்மிசார்டன் 20 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதால்,

  • பார்வையில் மாற்றங்கள்
  • தலைச்சுற்றல்
  • அதிகரித்த இதய துடிப்பு
  • வலிமிகுந்த சிறுநீர் கழிப்பு
  • வயிற்று வலி
  • வயிற்றுப்போக்கு
  • முதுகு வலி
  • பலவீனம்
  • தசை வலி
  • காய்ச்சல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

முன்னெச்சரிக்கை:

இந்த டெல்மிசார்டன் 20 மி.கி மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

கல்லீரல் நோய், சிறுநீரக செயலிழப்பு, இதய நோய், நீரிழிவு மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Ovabless மாத்திரையை அதிக அளவு பயன்படுத்துபரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிகோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement