வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Teneligliptin மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Updated On: January 3, 2024 11:47 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Teneligliptin Tablet Uses Tamil

இன்றைய காலகட்டத்தில் மருந்துகளால் மட்டுமே நம்மில் பலரின் வாழ்க்கை சீராக இயங்கி கொண்டிருக்கிறது எனலாம். அதற்கு காரணம் இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மற்றும் நாம் அனைவரின் உணவு பழக்கமும் தான். அப்படி நாம் பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லையென்றே இருக்கும்.

அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்து பற்றிய தகவல்களை அறிந்துகொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Teneligliptin மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

Lansoprazole மாத்திரை பற்றிய தகவல்

Teneligliptin Tablet Uses Tamil:

Teneligliptin Tablet Side Effects in Tamil

இந்த Teneligliptin மாத்திரையானது பொதுவாக வகை 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. இது டைபெப்டைடில் பெப்டிடேஸ்-4 தடுப்பான்கள் எனப்படும் மருந்துகளின் குழுவை சேர்ந்த ஒரு மருந்து ஆகும்.

இந்த மருந்தானது கணையத்தால் வெளியிடப்படும் இன்சுலின் அளவை அதிகரிப்பதன் மூலம் இது செயல்படுகிறது. மேலும் இது உடலில் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது.

இந்த மருந்தினை கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். அதேபோல் இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள்.

Teneligliptin Tablet Side Effects in Tamil:

Teneligliptin மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  1. தலைவலி
  2. இன்சுலின் சல்போனிலூரியா
  3. குமட்டல்
  4. வாந்தி
  5. நாசோபாரிஞ்சிடிஸ்
  6. வயிற்று வலி
  7. மேல் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள்
  8. மூட்டுவலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

Loratadine மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

இந்த Teneligliptin மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் நீங்கள் சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Dydrogesterone மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதனை தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now