த்ரோம்போபோப் ஆயின்மென்ட் பயன்கள்
த்ரோம்போப்ஹாப் என்பது ஒரு ஆயின்மென்ட் ஆகும். இவற்றில் ஹெபாரின் (Heparin), பென்ஸைல் நிகோடினேட் (Benzyl Nicotinate) ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளது. சரி இந்த ஆயின்மென்ட் என்னென்ன பிரச்சனைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த த்ரோம்போப்ஹாப் ஆயின்மென்டின் பயன்பாடுகள், அதன் பக்க விளைவுகள் மற்றும் பயன்படுத்தும் முறை போன்ற விவரங்களை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
த்ரோம்போபாப் ஆயின்மென்ட் பயன்பாடுகள்:
இந்த த்ரோம்போப்ஹாப் ஆயின்மென்ட் இரத்த உறைவு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது தசை வீக்கம், நரம்பு வீக்கம், நீலநிற கருப்பு நிற தோல்கள், சிராய்ப்பு புண், நரம்பு கட்டிகள் குணப்படுத்த இந்த த்ரோம்போப்ஹாப் ஆயின்மென்ட் பயன்படுத்தப்படுகிறது.
மருந்து செயல்படும் விதம்:
- இந்த ஆயின்மென்டை நீங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் பயன்படுத்தும் பொழுது இரத்த நாளங்களை விரிவு படுத்துகிறது.
- இரத்த உறைவு ஏற்படுவதை தடுக்கும்.
- பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
பயன்படுத்தும் முறை – Thrombophob Uses in tamil:
- குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பிறகு அந்த இடத்தில் வீக்கம் ஏற்படும் அந்த வீக்கத்தை குறைக்க இந்த மருந்தை பயன்படுத்தலாம்.
- உடலில் எனர்ஜி அதிகரிப்பதற்காக மருத்துவமனைகளில் Glucose ஏற்றுவார்கள் அப்பொழுது அந்த இடத்தில் சிலருக்கு வீக்கங்கள் ஏற்படும். அந்த வீக்கத்தை குறைக்க இந்த ஆயின்மென்டை பயன்படுத்தலாம்.
- மேலும் அடிபட்ட இடத்தில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க இந்த ஆயின்மென்டை பயன்படுத்தலாம்.
- இது போன்ற பிரச்சனைக்கு இந்த த்ரோம்போபாப் ஆயின்மென்டை மூன்று முதல் நான்கு நாட்கள் வரை பயன்படுத்தி வந்தால் பிரச்சனை குணமாகுமாம்.
பக்க விளைவுகள்
இந்த த்ரோம்போபாப் ஆயின்மென்ட் தொடர்ந்து பயன்படுத்துவதினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்று பார்த்தால் தோல் எரிச்சல், தோல் அரிப்பு, தோல் சிவத்தல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். இது போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
யாரெல்லாம் இந்த ஆயின்மென்டை பயன்படுத்த கூடாது:
கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மது அருந்துபவர்கள் இந்த ஆயின்மென்டை பயன்படுத்த கூடாது
Thrombophob ஆயின்மென்டை குழந்தைக்கு பயன்படுத்தலாமா?
இந்த ஆயிண்ட்மெண்டை குழந்தைகளுக்கு மருத்துவர் ஆலோசனை இலலாமல் தாமாக வாங்கி பயன்படுத்த கூடாது.
சைபால் மருந்து பயன்கள் |
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |