Tretinoin Cream Uses in Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் உடலில் எந்த இடத்தில் அலர்ஜி அல்லது காய்ச்சல், சளி போன்ற எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் இயற்கையான முறையை பின்பற்றினார்கள். முகத்தையும் சரி முடியையும் சரி சரியாகபராமரித்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைக்கிறார்கள்.
மேலும் சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் முகத்தில் பருக்கள் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பருக்களானது நாளடைவில் கருப்புள்ளிகளாக மாறுகின்றது. இதனை சரி செய்வதற்காக கெமிக்கல் நிறைந்த கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. அதனால் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு கிரீம்களிலும் உள்ள நன்மை மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Tretinoin கிரீம் எதற்காக பயன்படுகிறது என்று அறிந்து கொள்வோம்.
Tretinoin Cream Uses in Tamil:
நாம் பயன்படுத்தும் கிரீம்கள் ஒவ்வொரு பிரச்சனையை பொறுத்து மாறுபடுகிறது. இதில் நன்மைகளும் உள்ளது, தீமைகளும் உள்ளது. அதனால் நீங்கள் மருத்துவரிடம் காண்பித்து கிரீம்களை பயன்படுத்தினாலும் அந்த கிரீமை பற்றிய தகவலை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் Tretinoin கிரீம் எதற்காக பயன்படுகிறது என்று அறிந்து கொள்வோம்.
இந்த கிரீம் ஆனது முகப்பரு, முகச்சுருக்கம் போன்ற பிரச்சனைக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
பக்க விளைவுகள்:
- சருமத்தில் அரிப்பு
- உலர்ந்த சருமம்
- தோல் சிவந்த நிறமாக காணப்படுதல்
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் உங்களுக்கு தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். ஒருவேளை மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும்.
Levipil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது
மருந்தளவு:
இந்த கிரீமை மருத்துவர் ஒவ்வொரு நோயின் நிலையை பொறுத்து அளவுகளை கூறுவார்கள். அதனால் இதனை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த கிரீம் ஆனது பழக்க விளைவுகளை ஏற்படுத்தும், அதனால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும், அதனால் மருத்துவர் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதேனும் கிரீம்களை அப்பளை செய்து அதனால் ஏதும் பக்க விளைவுகளை சந்தித்தால் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |