Tryptomer 10 மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது.?

Advertisement

Tab Tryptomer 10 mg Uses in Tamil

மருந்து என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் ஒன்றாகும். உடலின் ஆரோக்யத்திற்காக ஏதொரு வகையில் மருந்துகளை உட்கொண்டு வருகிறோம். அப்படி நாம் உட்கொள்ளும் மருந்தினை பற்றி தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம் அல்லவா.? அதாவது, நாம் எடுத்துக்கொள்ளும் மருந்தின் பயன்பாடுகள் என்ன.? பக்கவிளைவுகள் என்ன.? உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வது அவசியம். ஆகையால், இப்பதிவில் மருந்துகளில் ஒன்றான Tryptomer 10 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி பின்வருமாறு பதிவிட்டுட்டோம்.

நீங்கள் Tryptomer 10 மாத்திரையை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அம்மாத்திரையின் பயன்கள் என்ன.? பக்கவிளைவுகள் என்ன.? என்பதை இப்பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

Cipmox 500 மாத்திரையை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா

What is The Use of Tab Tryptomer 10 mg:

பயன்பாடுகள்:

Tryptomer 10 மாத்திரை ஒரு ட்ரைசைக்ளிக் மனஅழுத்த மருந்தாகும். இது, மன அழுத்தம் மற்றும் அதன் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. எனவே, இம்மருந்தின் பொதுவான பயன்பாடு மனஅழுத்தத்தை சரிசெய்யவதாகும்.

பக்கவிளைவுகள்:

Tryptomer 10 மாத்திரையை பயன்படுத்தும் ஒரு சிலருக்கு பின்வரும் பக்கவிளைவுகள் ஏற்ப்படலாம். ஆகையால், இதுபோன்ற பக்கவிளைவுகளை நீங்கள் தொடர்ந்து அனுபவித்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

  • தலைவலி 
  • குமட்டல் அல்லது வாந்தி 
  • மலச்சிக்கல் 
  • மங்கலான பார்வை 
  • முகம், கைகள் மற்றும் கால்களின் வீக்கம் உண்டாதல்.
  • பேச்சு குளறுதல்
  • நெஞ்சு வலி 
  • மூச்சு விடுவதில் சிரமம்.

எடுத்துக்கொள்ளும் முறை:

Tryptomer 10 பெரும்பாலும் உணவுக்கு பின் உட்கொள்ளுமாறு கூறப்படுகிறது.

யாரெல்லாம் இம்மருந்தை பயன்படுத்தக்கூடாது.?

  • மாரடைப்பு உள்ளவர்கள் இம்மருந்தை பயன்படுத்தக்கூடாது.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இம்மாத்திரையை உட்கொள்ளக்கூடாது.
  • உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இம்மருந்தை பயன்படுத்தக்கூடாது.
  • கர்ப்பிணி பெண்கள் இம்மருந்தை பயன்படுத்தக்கூடாது அல்லது மருத்துவரின் அனுமதி பெற்றே இம்,இம்மாத்திரையை பயன்டுத்த வேண்டும்.

மேலும், மருந்தினை மருத்துவர் கூறிய அளவில் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. அளவுக்கு மீறி இம்மாத்திரையை உட்கொண்டால் உடலில் பல பிரச்சைனகளை ஏற்படுத்தக்கூடும்.

டாக்ஸி மாத்திரையை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா..?

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement