Ultracet Semi Tablet Uses in Tamil
நாம் எப்போதும் நமது உடலுக்கு நன்மை தரக்கூடிய பொருளை மட்டும் தான் சாப்பிட்டு கொண்டு இருப்பதாக நினைத்து கொண்டிருக்கின்றோம். அதுமட்டும் இல்லாமல் சிலவற்றை நாம் தேடி தேடி வாங்கி சமைத்து சாப்பிடுகிறோம். நமது உடலின் ஆரோக்கியதிற்கு உணவு எவ்வளவு மிக முக்கியமானதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு மருந்துகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி நடந்து கொண்டிருக்கும் செயலில் ஏதாவது தடை ஏற்பட்டால் நாம் உடனே கடையில் மருந்து வாங்கி சாப்பிடுவோம். இதுபோல உடனே மருந்தினை நாம் எதனால் வாங்கி சாப்பிடுகிறோம் என்றால் மருந்து தான் நமது உடலுக்கு சரியான தீர்வாக இருக்கிறது என்பது நம்முடைய கருத்து. ஆனால் நாம் இதுபோன்ற முறைகளில் உடலுக்கு மருந்து எடுத்துக்கொள்வதிலும் சில நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் இருக்கிறது. ஆகாயல் இன்று நமது மருந்து பதிவில் Ultracet Semi மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னவென்று பார்த்து பயன்பெறலாம் வாருங்கள்.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..
Ultracet Semi மாத்திரையின் பயன்கள் | Ultracet Tablet Uses:
- அல்ட்ராசெட் செமி மாத்திரையானது மூட்டு வலி, திடீரென்று ஏற்படக்கூடிய வலி மற்றும் நீண்ட நேரம் வரை இருக்கக்கூடிய வலி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வினை அளிக்கிறது.
- அதுமட்டும் இல்லாமல் பல் வலி, கால் வலி மற்றும் காய்ச்சலினால் ஏற்படும் உடம்பு வலி போன்ற அனைத்திற்கும் நல்ல பலனை அளிக்கக்கூடியதாக இருப்பதால் இதனை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்கின்றனர்.
Ascoril LS Syrup பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா..? |
Ultracet Semi Tablet Side Effects in Tamil:
- தலைவலி
- நரம்பு தளர்ச்சி
- குமட்டல்
- வாந்தி
- தூக்கமின்மை
- வயிற்றுப்போக்கு
- மலச்சிக்கல்
- உடலில் அழற்சி
- குழப்பம்
- அதிகப்படியான வியர்வை
- மூச்சு திணறல்
- வீக்கம்
- உடல் சோர்வு
- பசியின்மை
இந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் உங்களுக்கு மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் அதனை மருத்துவரிடம் கூற வேண்டும்.
Flexiflam மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..! |
மாத்திரையை சாப்பிடும் முறை:
- உங்களுக்கு மருத்துவர் அல்ட்ராசெட் செமி மாத்திரையை ஆலோசனை செய்தால் அவர் கூறிய அளவில் மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்யாமல் மருத்துவர் உங்களுக்கு சொல்லப்பட்டுள்ள அளவினை தவிர நீங்கள் கூடவோ அல்லது குறைவாகவோ சாப்பிடக்கூடாது.
- இந்த மாத்திரையை சாப்பாட்டிற்கு முன்பு வாய்வழியாக தண்ணீருடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
- கர்ப்பிணி பெண்கள்
- குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
- மது அல்லது சிகரெட் பிடிப்பவர்
- சிறுநீரகம் பிரச்சனை உள்ளவர்கள்
- கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் மருத்துவரிடம் வேறு ஏதேனும் மாத்திரைகள் உட்கொள்வது பற்றியும் மற்றும் தற்போது எடுத்துக்கொள்ளும் உணவு முறை பற்றியும் தெளிவாக மறைக்காமல் கூறுவது உடல் நலத்திற்கு நல்லது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |