Urispas Tablet Uses in Tamil
பொதுவாக நமக்கு உடல்நிலை சரியில்லை என்பதை நாம் நம்முடைய உடல் வழக்கத்திற்கு மாறான மாற்றங்களில் காணப்படுவதன் மூலமாகவும், சில அறிகுறிகள் தோன்றுவதன் மூலமாகவும் தான் தெரிந்துக்கொள்கிறோம். இவ்வாறு தெரிந்துக்கொண்ட பிறகு உடனே இதை சரிசெய்ய வேண்டும் என்று நினைத்து மாத்திரை எடுத்துக்கொள்ளுதல் அல்லது மருத்துவரை அணுகுதல் என இவற்றில் ஏதாவது ஒன்றை செய்து வருகின்றோம். இத்தகைய முறையினை நாம் மேற்க்கொண்டாலும் கூட நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரை வேறு எதற்க்கு எல்லாம் பயன்படுகிறது என்றும், அதில் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருக்கிறதா என்பதையும் நாம் கட்டாயமாக அறிந்துக்கொள்ள வேண்டும். ஆனால் இது மாதிரி அவ்வளவாக யாரும் செய்வது இல்லை. அதனால் இன்று யூரிஸ்பாஸ் என்று அழைக்கக்கூடிய மாத்திரையில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
யூரிஸ்பாஸ் மாத்திரை:
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- சிறுநீர்ப்பையில் வலி
- இரவு நேரத்தில் அதிகமாக சிறுநீர் கழித்தல்
- சிறுநீர்ப்பை தொற்று
- சிறுநீர்ப்பையில் வலி
- வலியுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம்
- மிகைப்புச் சிறுநீர்ப்பை
மேலே சொல்லப்பட்டுள்ள சிறுநீர் தொடர்பான அனைத்து விதமான நோய்களுக்கும் சிறந்த தீர்வினை அளிக்கக்கூடிய ஒன்றாக யூரிஸ்பாஸ் மாத்திரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மருந்தின் அளவு:
இத்தகைய மாத்திரையினை பொறுத்தவரை மருந்தின் அளவு என்பது உங்களுக்கு உள்ள நோயின் அளவிற்கு ஏற்றவாறு மருத்துவர்களால் வழங்கப்படுகிறது. அதேபோல் தண்ணீருடன் மட்டும் இதை நீங்கள் எடுத்துகொள்ள வேண்டும்.
மேலும் மருத்துவர் கூறிய அளவை விட கூடவோ அல்லது குறையாகவோ எடுத்துக்கொள்வது ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
யூரிஸ்பாஸ் மாத்திரை பக்க விளைவுகள்:
- மனதில் குழப்பம்
- நரம்புத்தளர்ச்சி
- குமட்டல்
- வாந்தி
- தலைவலி
- வாய் வறண்டு போதல்
- இதயத்துடிப்பு அதிகமாதல் அல்லது குறைவதால்
மேலே சொல்லப்பட்டு பக்க விளைவுகள் இல்லாமல் உங்களுக்கு வேறு ஏதேனும் பக்க விளைவுகள் காணப்பட்டால் அதனை அலட்சியம் படுத்தாமல் மருத்துவரிடம் கூற வேண்டும்.
முன்னெச்சரிக்கை யாருக்கு:
பொதுவாக நாம் எந்த மாத்திரையினை எடுத்துக்கொண்டாலும் கூட முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதனால் மருத்துவர் நமக்கு மருந்து மாத்திரையினை பரிந்துரை செய்யும் போது தற்போது உள்ள சூழல் பற்றியும், உணவு முறை மற்றும் மாத்திரைகளின் விவரங்கள் பற்றியும் தெளிவாக கூற வேண்டும்.
அந்த வகையில் யூரிஸ்பாஸ் மாத்திரையினை எடுத்துக்கொள்வதற்கு முன்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள நபர்கள் முன்னெச்சரியுடன் இருக்க வேண்டும்.
- இதய பிரச்சனை உள்ளவர்கள்
- கர்ப்பிணி பெண்கள்
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
- கிட்னி பிரச்சனை உள்ளவர்கள்
Diclovik Plus மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |