Ursodeoxycholic Acid Tablet Uses in Tamil
உடல்நல குறைபாடு ஏற்பட்டால் நாம் எடுத்து கொள்ளும் மாத்திரைகளில் நன்மைகள் மட்டுமில்லை தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதனை நீங்கள் எடுத்து கொள்ளும் ஒவ்வொரு மாத்திரைகளின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும். நம் பதிவில் தினந்தோறும் மாத்திரை, மருந்துகளை பற்றிய தகவலை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் ursodeoxycholic acid tமாத்திரையை எதற்காக எடுத்து கொள்கிறோம் என்று அறிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!
Ursodeoxycholic Acid Tablet Uses:
இந்த மாத்திரையானது பித்தப்பை கற்கள், முதன்மை பிலியரி கோலாங்கிடிஸ் மற்றும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸால் ஏற்படும் பித்தநீர் மற்றும் கல்லீரல் வீக்கம், கல்லீரல் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
Ursodeoxycholic Acid Side Effects:
- வயிற்று அசௌகரியம்
- வயிற்று வலி
- வயிற்றுப்போக்கு
- குமட்டல்
- காய்ச்சல்
- இருமல்
- சொறி
- மயக்கம்
- செரிமான பிரச்சனை
- மலம் கருப்பு மற்றும் தார் நிறத்தில் காணப்படும்
- அடிக்கடி மற்றும் வலிமிகுந்த சிறுநீர் கழித்தல்
- உடல் பலவீனம்
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம். மேலும் மேலே கூறியுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் மருத்துவரை அணுக வேண்டும்.
டாக்ஸி மாத்திரையை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா..?
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்களும் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மயக்கத்தை ஏற்படுத்தும். அதனால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதோடு மட்டுமில்லாமல் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருந்தளவு:
இந்த மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.
Cipmox 500 மாத்திரையை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |