Vertin 8 mg Tablet Uses in Tamil
பொதுவாக உடலில் சிறிய தலைவலி, காய்ச்சல் மற்றும் சளி, இருமல் என இத்தகைய பிரச்சனைகள் காணப்பட்டாலும் உடனே மருந்தகங்களில் அதற்கான மருந்தினை வாங்கி எடுத்துக்கொள்வோம். அப்படி பார்த்தால் இவ்வாறு மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நமது உடல்நிலை சரியாகி இருந்தாலும் கூட அடிக்கடி மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் ஒவ்வொரு மாத்திரைகளிலுமே பக்க விளைவுகள் என்பது இருந்து கொண்டு தான் உள்ளது.
அதனால் நாம் நம்முடைய உடலில் ஏற்படும் உடல்நல குறைபாட்டினை சரி செய்ய எந்த மருந்து மாத்திரையினை எடுத்துக்கொண்டாலும் கூட அது எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்றும், அதில் உள்ள பக்க விளைவுகள் என்ன என்பது பற்றியும் விரிவாக தெரிந்துகொள்வது அத்தியாவசியமான ஒன்று. அந்த வகையில் இன்று Vertin 8 mg மாத்திரையில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Vertin 8 mg மாத்திரையின் பயன்கள்:
Vertin 8 mg மாத்திரை ஆனது கீழே சொல்லப்பட்டுள்ள நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
- தலைசுற்றல்
- மெனீயெரின் நோய்
இத்தகைய மாத்திரை நமது உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு தான் மருந்தின் அளவானது மருத்துவரால் பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் இந்த மாத்திரையினை வாய் வழியாக தண்ணீருடம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
Vertin 8 mg Tablet Side Effects:
- செரிமான கோளாறு
- தலைவலி
- உடலில் அரிப்பு
- வீக்கம்
- குமட்டல்
- வாந்தி
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் அனைத்தும் Vertin 8 mg மாத்திரைக்கானதாக இருந்தாலும் கூட இவை இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் கூற வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
பொதுவாக எல்லா மருந்து மாத்திரைகளும் எல்லோருக்கும் ஒற்றுப்போவது இல்லை. ஆகையால் உங்களுக்கு மருத்துவர் ஒரு மாத்திரையினை பரிந்துரை செய்கிறார் என்றால் அதனால் உங்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு இருந்தால் அதனையும் மருத்துவரிடம் கூற வேண்டும்.
அந்த வகையில் Vertin 8 mg மாத்திரையினை எடுத்துக்கொள்பவர்கள் அதாவது கர்ப்பிணி பெண்கள், சிறுநீரகம் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் என இவர்கள் அனைவருமே முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Disulfiram Tablet Uses in Tamil
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |