Vildagliptin Tablet 50 mg Uses in Tamil
நாம் அனைவருமே உடல்நல பிரச்சனை ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரைகளை சாப்பிட்டால் உடல்நல பிரச்சனைகள் சரியாகுவது ஒரு புறம் இருந்தாலும் அதனால பக்க விளைவுகளும் மறுபுறம் உள்ளது. அதனால் நீங்கள் எடுத்து கொள்ளும் மாத்திரை மற்றும் மருந்துகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் மாத்திரை, மருந்துகளை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் vildagliptin மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாக பயன்படுத்த கூடாது..!
Vildagliptin Tablet Uses:
இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோய் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த நோயானது எந்த வித பாரபட்சமும் பார்க்காமல் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரை நாடி தான் செல்கின்றனர். அவர்கள் சர்க்கரையின் அளவானது எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிக்கிறது என்பதை பார்த்து விட்டு அதற்கான மாத்திரைகளை எழுதி தருவார்கள்.
அந்த வகையில் Vildagliptin மாத்திரையானது வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வில்டாக்ளிப்டின் பயன்படுத்தப்படுகிறது. வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்த உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் இது பயன்படுத்தப்படுகிறது.
Compound Benzoic Acid ஆயிண்ட்மென்ட் எதற்காக பயன்படுகிறது.
பக்க விளைவுகள்:
- மயக்கம்
- குமட்டல்
- தலைவலி
- அதிக வியர்வை
- குறைந்த இரத்த சர்க்கரை அளவு
- நடுக்கம்
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த மாத்திரையானது பரிந்துரைப்படடுவதில்லை. அதனால் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுடுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
Vildagliptin மாத்திரையானது மயக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருந்தளவு:
நீங்கள் Vildagliptin மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.
Safexim o மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |