Zentel Tablet Uses
பொதுவாக நமக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் நாம் அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் மருந்துகளை வாங்கி எடுத்துக்கொள்வோம். அப்படி இல்லை என்றால் மருத்துவரை பார்த்து அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வோம். இவ்வாறு நாம் மருந்துகளை வாங்கும் போது அதனுடைய தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியினை நன்றகா பார்த்து தான் வாங்குவோம். ஆனால் மருந்துகளை வாங்கும் போது இதனை மட்டும் நாம் தெரிந்துகொள்வோம் மட்டுமே முக்கியமானது கிடையாது. ஏனென்றால் ஒவ்வொரு மாத்திரைகளுக்கும் தனித்தன்மையான பக்க விளைவுகள் என்பது இருக்கிறது. ஆகையால் அத்தகைய பக்க விளைவுகளை நாம் தெரிந்துக்கொள்வது அத்தியாவசியமான ஒன்று. எனவே இன்றிய பதிவில் Zentel மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்று பார்க்கலாம் வாங்க.!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Zentel மாத்திரையின் பயன்கள்:
அன்றாட நமது வாழ்க்கையில் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் நாம் எவ்வளவு சுகாதாரமாக இருக்கின்றோம் என்பதை பொறுத்து தான் நமது ஆரோக்கியமான வாழ்க்கை என்பது அமையும்.
அந்த வகையில் நமது உடலில் நோய் தொற்றுகள் மூலமாக ஆரோக்கியம் என்பது சீர்குலைகிறது. ஆகவே இதன் படி பார்க்கும் போதும் நமது குடல் புழுக்கள் மற்றும் ஓட்டுண்ணி தொற்றுகள் போன்ற நோய்களை குணப்படுத்துவதற்கு Zentel மாத்திரை பயன்படுகிறது.
மருந்தின் அளவு:
Zentel மாத்திரையை மருத்துவர் யாருக்கு பரிந்துரை செய்தாலும் மருத்துவர் கூறிய அளவில் மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும். அதேபோல் இந்த மாத்திரையினை பாலுடனோ அல்லது டீயுடனோ சேர்த்து எடுத்துகொள்ள கூடாது.
மேலும் மாத்திரையினை நசுக்கியோ அல்லது மென்றோ சாப்பிடக் கூடாது. இந்த மாத்திரையினை தண்ணீருடன் மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும்.
| Calpol 650 மாத்திரை பயன்படுத்துவீர்களா… அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.. |
Zentel Tablet Side Effects:
- வயிற்று வலி
- தலைவலி
- மயக்கம் அல்லது தலைசுற்றல்
- வாந்தி
- குமட்டல்
மேலே நோய்கள் அனைத்தும் Zentel மாத்திரையின் பக்க விளைவுகளாக உள்ளது. ஆனால் இத்தகைய பக்க விளைவுகள் இல்லாமல் உங்களுக்கு வேறு ஏதேனும் பக்க விளைவுகள் தோன்றினாலும் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் மருத்துவர் இந்த மாத்திரையினை பரிந்துரை செய்கிறார் என்றால் கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், மது அருந்துபவர், கல்லீரல் மற்றும் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களை முன்னெச்சரிக்கையுடன் தற்போது உங்களின் வாழ்க்கை நடைமுறையினை கூற வேண்டும்.
Nicip 100 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா
| இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |














