ஜெரோடோல் MR மாத்திரையை பற்றிய தகவல்..!

Advertisement

Zerodol mr Tablet Uses in Tamil

இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் நமது முறையற்ற வாழ்க்கை முறையாலும் நோய்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டன. எனவே அவற்றை குணமாக்க பயன்படும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. அதனால் இப்பொழுது உங்களுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்வதற்காக நீங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றே ஒரு மருந்தினை உட்கொள்கிறீர்கள் என்றாலும் அந்த மருந்து பற்றிய தகவல்களை நீங்கள் நன்கு தெளிவாக அறிந்துகொண்ட பிறகு தான் அந்த மருந்தினை உட்கொள்வது நல்லது. அந்த வகையில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் ஜெரோடோல் MR மாத்திரை (Zerodol mr Tablet) பற்றிய தகவல்களை தான் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து ஜெரோடோல் MR மாத்திரை பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

டெக்ஸா ஊசியின் பக்கவிளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

Zerodol mr Tablet Uses in Tamil:

Zerodol mr Tablet Side Effects in Tamil

இந்த ஜெரோடோல் MR மாத்திரையானது பொதுவாக வலி நிவாரணியாக செயல்படுகிறது. அதாவது இது மூட்டு வலி, பல்வலி, தலைவலி, கீல்வாதம், மூளை மற்றும் நரம்பு கோளாறுகள் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கின்றது.

இந்த மருந்தினை மருத்துவர் பரிந்துரைத்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக மருத்துவர் அளித்த அளவினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உட்கொண்டால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Zerodol mr Tablet Side Effects in Tamil:

இந்த ஜெரோடோல் MR மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  • சீரற்ற இதயத்துடிப்பு
  • தலைச்சுற்று
  • வயிற்று இரத்தப்போக்கு
  • செரிமானமின்மை
  • வயிற்று வலி
  • குமட்டல் 
  • மூச்சுத்திணறல்
  • சோர்வு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

அட்டோவாஸ்தீன் 10 மி.கி மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

இந்த ஜெரோடோல் MR மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

உங்களுக்கு இரைப்பை குடல் கோளாறு, கடுமையான இதய சேதம், கடுமையான சிறுநீரக கோளாறு உள்ளது என்றால் இந்த மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் அலோசனையை பெற்று கொள்ளுங்கள்.

மது அருந்துவார்கள் இந்த மாத்திரையினை எடுத்து கொள்ள கூடாது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

டெல்மிகைண்ட் 40 மிகி மாத்திரையை பயன்படுத்துவதில் இப்படி ஒரு விஷயம் இருக்கா இத்தனை நாளா இது தெரியமா போச்சே

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement