Zifi 200 மாத்திரையில் உள்ள பயன்கள் | Zifi 200 Tablet Uses in Tamil..!

Advertisement

Zifi 200 மாத்திரையில் உள்ள பயன்கள் | Zifi 200 Tablet Uses in Tamil..!

நம்முடைய உடலில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை சரி செய்வதற்கு மருந்துகளை எடுத்துக்கொள்வோம். இவ்வாறு நாம் எந்த மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் அதில் உள்ள பயன்கள் என்ன..? பக்க விளைவுகள் என்ன..? என்பதை தெரிந்துகொள்வது அடிப்படையிலான ஒன்றாக உள்ளது. அதனால் இத்தகைய நடைமுறையினை நாம் வழக்கமாக வைத்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்துக்கொள்வது நம்முடைய உடலுக்கு மிகவும் ஏற்ற ஒன்றாக இருக்கும். ஆகவே இன்று Zifi 200 மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாங்க..!

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Zifi 200 Tablet Uses:

zifi 200 tablet side effects in tamil

நம்முடைய உடலில் காணப்படும் நோய்களுக்கு ஏற்றவாறு தான் மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகிறது. அந்த வகையில் சிறுநீர் தோற்று, பாக்டீரியா தொற்று, மூச்சுக் குழாய் அழற்சி, பாக்டீரியா காய்ச்சல் மற்றும் எலும்பு மற்றும் எலும்பு மூட்டுகளில் காணப்படும் நோய் தொற்று என இத்தகைய நோய்கள் அனைத்திற்கும் தீர்வு அளிக்கும் விதமாக இந்த மாத்திரை பரிந்துரை செய்யப்படுகிறது.

மருந்தின் அளவு:

Zifi 200 மாத்திரை ஒரு ஆன்டிபயாட்டிக் மாத்திரை என்பதால் பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 1 அல்லது 2 என மருத்துவரால் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த மாத்திரையினை மருத்துவர் கூறிய அளவில் மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் இந்த மாத்திரையினை உணவுக்கு முன்பாக தண்ணீருடன் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

Diclovik Plus மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Zifi 200 Tablet Side Effects in Tamil:

  • தொண்டைவலி
  • வயிற்றுப்போக்கு
  • காய்ச்சல்
  • நெஞ்சுவலி
  • தலைசுற்றல்

மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் Zifi 200 மாத்திரையின் பக்க விளைவுகளாக இருந்தாலும் கூட வேறு ஏதேனும் அறிகுறிகள் இது இல்லாமல் தோன்றினால் அதனை மருத்துவரிடம் கூற வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், சிறுநீர் பிரச்சனை உள்ளவர்கள், நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் ஆகிய நிலையில் இருப்பவர்கள் மருத்துவர் உங்களுக்கு Zifi 200 மாத்திரையினை பரிந்துரை செய்தால் தற்போது சூழ்நிலை பற்றிக் கூற வேண்டும்.

Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement