Zinc Oxide Cream Uses in Tamil

Advertisement

Zinc Oxide Cream Uses in Tamil

பொதுவாக முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக  செயற்கையாக தயாரிக்கப்பட்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் முகத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யும். ஆனால் நாளடைவில் அதனால் பக்க விளைவுகள் ஏற்படும். அதனால் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு மருந்து, மாத்திரைகள், கிரீம்கள், ஊசி போன்றவற்றில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் zinc oxide கிரீம் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

Zinc Oxide Cream Uses in Tamil:

இந்த கிரீமை பயன்படுத்துவதால் சூரிய ஒளியிலிருந்து உங்களை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

தோளில் ஏதும் காயங்கள் இருந்தால் அதனை சரி செய்வதற்கு உதவுகிறது.

சில நபர்களுக்கு எண்ணெய் சருமமாக காணப்படும், எப்போது பார்த்தாலும் முகத்தில் எண்ணெய் வலிந்து கொண்டே இருக்கும். இதனை சரி செய்வதற்கு இந்த கிரீமை பயன்படுத்தலாம்.

முகப்பருவை சரி செய்ய பயன்படுத்துகிறது.

ஊட்டச்சத்து குறைபாடுகளால் தோல்களில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

டாக்ஸி மாத்திரையை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா..?

Zinc Oxide Cream Side Effects:

தோலில் அரிப்பு

வீக்கம்

எரிச்சல்

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் அதனை மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தா;லும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமானது.

முன்னெச்சரிக்கை:

நீங்கள் வெறும் ஏதும் பிரச்சனைக்காக கிரீம் அல்லது மருந்து, மாத்திரைகள் எடுத்து கொண்டு அதன் மூலம் பக்க விளைவுகளை சந்தித்திருந்தால் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

Advertisement