ஜிங்க் சல்பேட் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Zinc Sulphate Tablet Uses in Tamil

ஜிங்க் சல்பேட் மாத்திரை பயன்கள் | Zinc Sulphate Tablet Uses in Tamil

Zinc Sulphate Tablet Uses in Tamil – இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலோனோர் உடலில் ஏற்படும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருத்துவமனைக்கு செல்லாமல், மெடிக்கல் ஷாப்பில் குறைகளை கூறி தானாகவே மருந்துகளை எடுத்துக்கொள்கின்றன. இது மிகவும் தவறான விஷயம் ஆகும். உடலில் எந்த ஒரு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி அதற்கு நாம் மருத்துவனைக்கு சென்று மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று தான் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள கூடாது. இருப்பினும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி கட்டாயம் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று நாம் ஜிங்க் சல்பேட் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்துகொள்ள வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

ஜிங்க் சல்பேட் மாத்திரை:Zinc Sulphate Tablet

இந்த ஜிங்க் சல்பேட் மாத்திரை என்பது உடல் துத்தநாகம் அளவு குறைவாக உள்ளதற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மாத்திரை ஆகும், இது உங்கள் உடல் சரியான வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது.

பயன்கள் – Zinc Sulphate Tablet Uses in Tamil:

  • எலும்பு அடர்த்திக்கு பங்களிக்கிறது.
  • கருவுறுதல் மற்றும் இனப்பெருக்கத்திற்கு பங்களிக்கிறது.
  • சாதாரண நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு பங்களிக்கிறது.
  • ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கிறது.
  • பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது ஹார்மோன் பிரச்சனைகளுக்கு பயன்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மெத்தில்கோபாலமின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

ஜிங்க் சல்பேட் மாத்திரையின் பக்க விளைவுகள் – Zinc Sulphate Tablet Side Effects:

இந்த ஜிங்க் சல்பேட்டை மாத்திரை சுவாசக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்தும், குமட்டல், வாந்தி, வயிற்று வலி, தலைச்சுற்றல், மனச்சோர்வு, வாயில் உலோகச் சுவை போன்றவற்றை ஏற்படுத்தும். தோல்களில் புண்கள், கொப்புளங்கள் மற்றும் வடு போன்றவை ஏற்படலாம்.

ஜிங்க் சல்பேட் எடுக்கும்போது நாம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்?

கால்சியம் அல்லது பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவுகளுடன் இந்த மருந்தை எடுத்துக்கொளவதை தவிர்க்கவும், இவை உங்கள் உடல் துத்தநாக சல்பேட்டை உறிஞ்சுவதை கடினமாக்கும்.

கால்சியம் அல்லது பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவுகளான பால், தயிர், சீஸ், ஐஸ்கிரீம், உலர்ந்த பீன்ஸ் அல்லது பட்டாணி, பருப்புகள், வேர்க்கடலை வெண்ணெய், பீர், கொக்கோகோலா குளிர்பானங்கள் போன்றவரைகளை எடுத்துக்கொள்ள கூடாது.

மருந்தளவு:

வழக்கமான தினசரி டோஸ்கள் 12 முதல் 150 மி.கி வரை இலவச துத்தநாகமாக அல்லது 220 மி.கி வரை ஜிங்க் சல்பேட்டாக இருக்கும். அதிக அளவு, நீண்ட கால துத்தநாக சப்ளிமெண்ட்டை தவிர்க்கவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அம்லோடிபின் மாத்திரை பயன்கள்

எச்சரிக்கை:

  • உங்களுக்கு உடலில் அலர்ஜி இருக்கிறது என்றால் இந்த மருந்தை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.
  • கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்மணிகள் இந்த மருந்தை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • இந்த மருந்தை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து