Zinc Tablet Uses in Tamil
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலோனோர் தங்களது உடலில் ஏற்படும் உடல்நல குறைபாடுகளினை சரி செய்வதற்காக மருத்துவமனைக்கு செல்லாமல், மெடிக்கல் கடைகளில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறைகளை கூறி தானாகவே மருந்துகளை வாங்கி எடுத்துக்கொள்கின்றன. இது மிகவும் தவறான விஷயம் ஆகும். உடலில் எந்த ஒரு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி அதற்கு நாம் மருத்துவனைக்கு சென்று மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று தான் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இருப்பினும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி கட்டாயம் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று நாம் ஜிங்க் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்துகொள்ள வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Livogen xt மாத்திரை பற்றிய தகவல்கள்
Zinc Tablet Uses in Tamil:
இந்த ஜிங்க் மாத்திரையானது நமது உடலில் ஏற்படும் துத்தநாகக் குறைபாடு, வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ள குழந்தைகள், குழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் காயத்தை குணப்படுத்த போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கின்றது.
இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, குறைந்த சுவாசக்குழாய் தொற்றுநோய்களைத் தடுக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இது ஹைபராக்டிவிட்டி கோளாறு, ஹைபோஜீசியா, டின்னிடஸ், கிரோன் நோய், அல்சைமர் நோய், டவுன் சிண்ட்ரோம், ஹேன்சன் நோய், பெப்டிக் புண்கள், ஆண் மலட்டுத்தன்மை, விறைப்புத்தன்மை குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், முடக்கு வாதம் மற்றும் தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிகிச்சை அளிக்கின்றது.
இந்த மருந்தில் பலவகையான மி.லி உள்ளதால் இதனை மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
டெல்மிசார்டன் 20 மி.கி மாத்திரை பற்றி யாருக்கும் தெரியாத சில குறிப்புகள்
Zinc Tablet Side Effects in Tamil:
இந்த Zinc மாத்திரையை பயன்படுத்துவதால்,
- குமட்டல்
- வாந்தி
- வயிற்று வலி
- வயிற்றுப்போக்கு
- வாயில் உலோக சுவை
- தலைவலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
முன்னெச்சரிக்கை:
இந்த Zinc மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் நீங்கள் கர்ப்பிணியாகவோ அல்லது குழந்தை பிறப்பிற்காக திட்டமிடுபவராக இருந்தாலும் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ள வேண்டும்.
மேலும் நீங்கள் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க நீங்கள் கீமோதெரபி மேற்கொள்பவராக இருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ள வேண்டும்.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
கிளிப்பிஸைட் மாத்திரை பற்றிய சில குறிப்புகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |