Zincovit Drops Uses in Tamil
பொதுவாக நமது உடல் நலத்தில் ஏதாவது ஒரு குறைபாடு என்றால் மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்க்கொள்வது நல்லது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அனைவருமே மெடிக்கல் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்வதை பழக்கமாக வைத்திருக்கின்றோம். அப்படி மருத்துவரை அணுகாமல் நாமே மருந்துவாங்கி உட்கொள்வது தவறு. ஆனால் மிகவும் தவிர்க்கமுடியாத சூழலில் மட்டும் இப்படி மருத்துவரை அணுகாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்கிறீர்கள் என்றால், அப்படி நாம் உட்கொள்ளும் மருந்து எந்தெந்த நோய்களுக்கு தீர்வாக அமையும் என்பதை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொண்டு பிறகு உட்கொள்ளுங்கள். அந்தவகையில் இன்றைய பதிவில் Zincovit சொட்டு மருந்து பற்றிய தகவலை பார்க்க இருக்கின்றோம். எனவே இன்றைய பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
ஜெரோடோல் MR மாத்திரையை பற்றிய தகவல்
Zincovit Drops Uses in Tamil:
இந்த Zincovit சொட்டு மருந்தானது பொதுவாக செரிமானம், ஊட்டச் சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு, எடை இழப்பு, கடுமையான வயிற்றுப்போக்கு, பசியின்மை, வைட்டமின் குறைபாடு, கண் பிரச்சினைகள் மற்றும் இரத்த சோகை போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கிறது.
இந்த மருந்தினை மருத்துவர் பரிந்துரைத்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக மருத்துவர் அளித்த அளவினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உட்கொண்டால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
Zincovit Drops Side Effects in Tamil:
இந்த Zincovit சொட்டு மருந்தினை பயன்படுத்தினால்,
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- குமட்டல்
- பசியிழப்பு
- முதுகு வலி
- உலர்ந்த வாய்
- ஸ்ட்ரோக் ஆபத்து
- உடல்பருமன்
- தலைச்சுற்று போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
டெக்ஸா ஊசியின் பக்கவிளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா
முன்னெச்சரிக்கை:
இந்த Zincovit சொட்டு மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
உங்களுக்கு இரத்த பிரச்சினைகள், இருதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
அட்டோவாஸ்தீன் 10 மி.கி மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |