ஜின்கோவிட் மாத்திரை பயன்கள் | Zincovit Tablet Uses in Tamil

Zincovit Tablet Uses in Tamil

ஜிங்கோவித் மாத்திரை நன்மை மற்றும் தீமை | Zincovit Tablet Uses in Tamil

Zincovit Tablet Uses in Tamil: உடலில் வைட்டமின் சத்து குறைபாடு பிரச்சனை இன்றைய காலத்தில் அனைவரும் சந்திக்கக்கூடிய ஒன்று. வைட்டமின் குறைபாட்டிற்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஜின்கோவிட் மாத்திரையைத்தான். உடலில் இருக்கும் நரம்பு மண்டல பகுதியை பாதுகாப்பதில் அதிக திறன் கொண்டது இந்த மாத்திரை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செலினியம் என்ற சக்தி ஜின்கோவிட் மாத்திரையில் அதிகளவு உள்ளன. ஜின்கோவிட் மாத்திரையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ உயிரணு வளர்ச்சியை மேம்படுத்தி, உடலில் உள்ள  அனைத்து பகுதிகளிலும் திசுக்களின் வளர்ச்சி மற்றும் அதை பழுது பார்க்க பெரும் உதவியாக உள்ளது. உடலில் முக்கியமாக நீரழிவு நோயாளிகள், இதயம் சம்பந்த நோய், காசநோய், வாதநோய் போன்ற கொடிய நோய்களால் அவதிப்பட்டவர்களுக்கு உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்க ஜிங்கோவித் மாத்திரை பயன்படுகிறது. இந்த பதிவில் ஜிங்கோவித் மாத்திரையின் நன்மை மற்றும் தீமை குறித்து படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு

 

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

ஜின்கோவிட் டேப்லெட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்:

ஜின்கோவிட் மாத்திரை (zincovit tablet uses in tamil) என்பது வைட்டமின் சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக நிறைந்த மாத்திரை வகையாகும். ஜின்கோவிட் மாத்திரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 1, வைட்டமின் பி 2, வைட்டமின் பி 3, வைட்டமின் பி 5, வைட்டமின் பி 6, வைட்டமின் பி 7, வைட்டமின் பி 9, வைட்டமின் பி 12, வைட்டமின் சி, வைட்டமின் டி 3, வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளது.

தாது சத்துக்களான துத்தநாகம், தாமிரம், மங்கனீன்ஸ், மெக்னீசியம், அயோடின், செலினியம், குரோமியம், மாலிப்டினம் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.

எவ்வளவு டோஸ் எடுக்க வேண்டும்?

மருத்துவர்கள் நோயாளிகளுடைய வயது மற்றும் அவர்களின் உடல்நல பிரச்சனைகளை பொறுத்து எந்த அளவிற்கு மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும் அவர்களுக்கு பரிந்துரைக்கின்றனர்.

உடல்நல கோளாறுகள் ஏற்படும்போது மருத்துவரிடம் கேட்காமல் ஜின்கோவிட் மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது. இருப்பினும் நாள் முழுவதும் ஒரு முறை ஒரு டோஸ் அளவிற்கு ஜின்கோவிட் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

செதிரிசின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

ஜின்கோவிட் மாத்திரை நன்மைகள் | Zincovit Tablet Uses in tamil:

 • zincovit tablet uses tamil: உடல் எப்போதும் சோர்வு நிலையில் இருப்பவர்களுக்கு மற்றும் உடலில் பலவீனம் குறைவாக இருப்பவர்களுக்கு ஜின்கோவிட் நல்ல மாத்திரையாக விளங்குகிறது.
 • கர்ப்பிணி காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கரு வளர்ச்சி நன்றாக இருக்க ஜின்கோவிட் மாத்திரையை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
 • சாப்பிடும் உணவில் ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதில் ஏதோ பிரச்சனையின்  காரணமாக, தினமும் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் என்றால் தயக்கம் இல்லாமல் வைட்டமின் மாத்திரையுடன் ஜின்கோவிட் மாத்திரையையும் சாப்பிடலாம்.
 • ஜின்கோவிட் மாத்திரையை அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுத்துக்கொண்டால் உடலுக்கு நன்மை கிடைக்கும்.
 • நாள்பட்ட வயிற்றுப் போக்கு பிரச்சினைக்கு நல்ல தீர்வினை கொடுக்கிறது இந்த  ஜின்கோவிட் மாத்திரை. குறிப்பு: வயிற்று போக்கு பிரச்சனைக்கு மருத்துவரின் அறிவுரை படி மாத்திரையின் டோஸ் அளவினை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • உடலில் வைட்டமின் சத்து குறைபாடு, துத்தநாகம் குறைபாடு உள்ளவர்கள் இந்த ஜின்கோவிட் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
 • கண்களில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் மருத்துவர்கள் முதலில் பரிந்துரைப்பது ஜின்கோவிட் மாத்திரையைத்தான்.
 • சிலருக்கு உடலில் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஜின்கோவிட் மாத்திரையை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
 • மேலும் பசியின்மை பிரச்சனை, உடல் எடை குறைவு பிரச்சனை, எலும்பு பகுதிகள் பலம் பெற ஜின்கோவிட் மாத்திரை சாப்பிடலாம்.

ஜின்கோவிட் மாத்திரை தீமைகள் | Zincovit Tablet Side effects in tamil:

 • zincovit tablet side effects in tamil: ஜின்கோவிட் மாத்திரை நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு எந்த பாதிப்பினையும் உண்டாக்காது.
 • இருப்பினும் அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
 • பெரும்பாலும் பிரச்சனை ஏற்படாவிட்டாலும் ஒரு சிலருக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
 • அரிப்பு சம்பந்தமான பிரச்சனை, வாய் வறட்சி, தூக்கமின்மை பிரச்சனை, இதயம் வேகமாக துடித்தல், உடல் சோர்வு, உடல் சூடு, சிறுநீரக பகுதியில் கல் அடைப்பு பிரச்சனை  வாய் சுவை இல்லாமல் இருத்தல், தொண்டை பகுதியில் வீக்கம் அடைதல், மூட்டு பகுதியில் ஏற்படும் வலி, ஒவ்வாமை, உதடு மற்றும் சருமம் வீங்கி போதல், நாள்பட்ட இருமல், அதிகமாக சிறுநீர்வெளியாதல், குமட்டல் மற்றும் மனதில் ஏற்படும் பதற்றம் போன்றவை இதன் பக்க விளைவுகளாக கருதப்படுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil