Zinetac மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Advertisement

Zinetac Tablet Uses in Tamil

இன்றைய சூழலில் நாம் வாழும் இந்த உலகம் தினமும் அதிக அளவு வளர்ச்சிகளை கண்டுகொண்டே இருக்கின்றது. அதேபோல் அப்படி வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்கின்ற பல வகையான முயற்சிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி கொண்டே தான் உள்ளது. அதனால் இந்த உலகில் தினமும் ஒரு புதிய வகையான நோய்களும் ஏற்பட்டு கொண்டிருக்கின்றது. அப்படி ஏற்படும் நோயினை கட்டுப்படுத்த உதவும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டிருக்கின்றது. எனவே நமது உடல் நலத்தை பாதுகாக்க உதவும் மருந்துகளை பற்றிய சரியான புரிதல் நம்மிடம் அவ்வளவாக இல்லை என்பதே உண்மை. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு மருந்து பற்றிய முழுமையான தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Zinetac மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

பான்டோப் மாத்திரையை பயன்படுத்துவதால் இவ்வளவு நடக்குமா

Zinetac Tablet Uses in Tamil:

Zinetac Side Effects in Tamil

இந்த Zinetac மாத்திரையானது ஹிஸ்டமைன்-2 தடுப்பான் என்று அறியப்பட்ட ஒரு மருந்து குழுவுக்கு சொந்தமானது. இந்த மருந்து இரைப்பையில் அமில உற்பத்தியின் அளவை குறைத்து, இரைப்பை மற்றும் குடல் புண்களை திறம்பட குணப்படுத்தக்கூடியது.

மேலும், இந்த மருந்தானது இரைப்பையில் அதிகப்படியான அமில உற்பத்திக்கு வழிவகுக்கும், இரையக நோய் (GERD) மற்றும் சோழிங்கர்-எலிசன் நோய்க்குறி போன்ற நிலைமைகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

இந்த மாத்திரையில் பல மி.கி உள்ளதால் இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Amoxyclav 625 மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க

Zinetac Side Effects in Tamil:

Zinetac மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  • தலைவலி
  • கல்லீரல் பிரச்சனை
  • நெஞ்சு வலி
  • மங்கலான பார்வை
  • மனக் குழப்பம்
  • உதடுகள் வீக்கம்
  • வயிற்றுப்போக்கு
  • மிகவும் குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

Aceclofenac மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்

முன்னெச்சரிக்கை:

இந்த Zinetac மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

ரானிடின் 150 மிகி மாத்திரை அதிக அளவு பயன்படுத்துபவரா நீங்க அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement